வெங்கட்பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் விஜய் 68 திரைப்படத்தின் First look வெளியானது.
ஆங்கிலப் புத்தாண்டை முன்னிட்டு நடிகர் விஜய் நடிக்கும் ‘விஜய் 68’ திரைப்படத்தின் First look போஸ்டர் நேற்று (31) மாலை 6 மணிக்கு படக்குழுவால் வெளியிடப்பட்டது.
லியோ படத்தைத் தொடர்ந்து விஜய்யின் 68-வது படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இதில் நடிகர்கள் ஜெயராம், பிரபு தேவா, மோகன், பிரஷாந்த், வைபவ், சினேகா, லைலா, மீனாட்சி சௌத்ரி உள்ளிட்டோர் நடிக்கின்றனர். படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
ஏ.ஜி.எஸ் நிறுவனம் பிரம்மாண்ட பொருள் செலவில் தயாரித்து வருகிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. மேலும், விஜய்யின் 68-வது படத்தின் பெயர் கோட் (G.O.A.T. – Greatest Of All Times) என்று தகவல் பரவி வருகிறது.
இந்த நிலையில் விஜய் 68 திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதன்படி ஆங்கிலப் புத்தாண்டையொட்டி விஜய் 68 படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.
நன்றி தமிழன்





