ஆஸ்திரேலியர்களுக்கு இலவச தடுப்பூசிகள் இன்று முதல் தொடங்கும்.
எந்தவித நிர்வாகக் கட்டணமும் இன்றி தடுப்பூசிகளைப் பெறலாம் என்று மத்திய அரசு கூறுகிறது.
அரசாங்கத்தின் தேசிய நோய்த்தடுப்பு திட்டத்தின் கீழ் சமூக மருந்தகங்களில் இருந்து தடுப்பூசிகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது மக்களின் பணத்தையும் நேரத்தையும் மிச்சப்படுத்தும் எனவும் அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள 6000 சமூக மருந்தகங்களில் இருந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதே அரசின் எதிர்பார்ப்பு.





