கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான கொள்கைகளை தொழிற்கட்சி அரசாங்கம் செயல்படுத்தத் தவறியதாகக் குற்றம் சாட்டப்பட்டது.
கடந்த வருட இறுதிக்குள் கரியமில வாயு வெளியேற்றத்தைக் குறைக்கும் திட்டத்தை அரசாங்கம் அறிவித்திருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஆனால் அந்த வாக்குறுதிகளை அந்தோனி அல்பானீஸ் அரசாங்கம் நிறைவேற்றத் தவறிவிட்டது.
எலெக்ட்ரிக் கார்களின் பயன்பாட்டை அதிகரிக்கத் திட்டமிட்டிருந்தாலும், கடந்த ஆண்டு விற்பனை செய்யப்பட்ட வாகனங்களில் 8 சதவீதம் மட்டுமே மின்சாரம் என்று அறிக்கைகள் உறுதிப்படுத்துகின்றன.
இதன்படி, அரசாங்கம் தனது கொள்கை வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என சுயாதீன பாராளுமன்ற பிரதிநிதி கைலி டின்க் சுட்டிக்காட்டியுள்ளார்.