நடிகர் இளையதளபதி விஜய் இலங்கைக்கு செல்லவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இளையதளபதி விஜய் நடித்த லியோ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி கண்டதையடுத்து, ‘தளபதி 68 ‘ படத்திற்காக இயக்குனர் வெங்கட் பிரபுவுடன் கைகோர்த்துள்ளார்.
‘தளபதி 68’ இன் படப்பிடிப்பு கடந்த சில வாரங்களாக ஹைதராபாத்தில் உள்ள ஒரு திரைப்பட நகரத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ‘தளபதி 68 ‘ திரைப்படத்தின் படப்பிடிப்பு இலங்கையில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த படப்பிடிப்பு ஜனவரி இரண்டாவது வாரத்தில் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படும் நிலையில் ‘தளபதி 68’ படக்குழுவினர் விரைவில் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அந்த தகவல்கள் கூறுகின்றன.
இதேவேளை இளயதளபதி விஜய் மனைவி சங்கீதா யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
நன்றி தமிழன்





