விக்டோரியாவில் உள்ள டான்டெனாங் கவுன்சில் முன் பாலஸ்தீனக் கொடி உயர்த்தப்பட்டுள்ளது.
காஸா மோதலினால் பாதிக்கப்பட்ட பொது மக்களுக்கானது எனத் தெரிவிக்கப்படுகிறது.
கொடியேற்றம் விழாக்கோலம் பூண்டதாகவும், இதில் ஏராளமானோர் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.
முன்னதாக, சிட்னியின் கேன்டர்பரி-பேங்க்ஸ்டவுன் உள்ளூராட்சிப் பகுதியில் பாலஸ்தீனக் கொடியை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மாநகர சபை உறுப்பினர்கள் அனைவரும் ஏகமனதாக தீர்மானத்தை எட்டியதாக தெரிவிக்கப்படுகிறது.
அதன்படி, அவுஸ்திரேலியாவில் உள்ள மூன்று உள்ளூராட்சி மன்றங்கள் மோதல்களால் பாதிக்கப்பட்ட காஸாவின் பொது மக்களுக்காக உத்தியோகபூர்வமாக பாலஸ்தீனக் கொடியை உயர்த்தியுள்ளன.