முட்டை விலையை மீண்டும் அதிகரிக்க வேண்டும் என உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
உற்பத்திச் செலவு மிகவும் அதிகமாக உள்ளதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
எனவே முட்டை மற்றும் கோழிப் பொருட்களின் விலையை அதிகரிப்பது தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இடைத்தரகர்களும், சில்லரை வியாபாரிகளும் முட்டைகளை விற்பனை செய்வதன் மூலம் போதிய வருமானம் ஈட்ட முடியவில்லை என உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஆண்டு நவம்பர் வரையிலான பன்னிரெண்டு மாதங்களில் முட்டை விலை கிட்டத்தட்ட 11 சதவீதம் உயர்ந்துள்ளதாக ஆஸ்திரேலிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
கோழிப் பொருட்களுக்கு புதிய விதிகளை அறிமுகப்படுத்தவும் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதன் காரணமாக சிறு வியாபாரிகள் முட்டை உற்பத்தியை கைவிடுவதாகவும், இதுவும் விலை அதிகரிப்பதற்கு காரணமாக அமைவதாக பாரிய உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.