Newsமீண்டும் முதலிடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம்

மீண்டும் முதலிடத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம்

-

மைக்ரோசாப்ட் நிறுவனம் ஆப்பிள் நிறுவனத்தை பின்னுக்குத் தள்ளி சந்தையில் அதிக மதிப்பு மிக்க நிறுவனம் என்ற அந்தஸ்த்தை எட்டியுள்ளது.

தற்போதைய நிலவரப்படி மைக்ரோசாப்ட் சந்தை மதிப்பு 2.87 ட்ரில்லியன் டொலர்களாகும். முன்னதாக 2018 மற்றும் 2021 ஆண்டுகளில் மைக்ரோசாப்ட் நிறுவனம் இதே போன்று உலகின் மதிப்பு மிக்க நிறுவனம் என்ற நிலையை எட்டியமை குறிப்பிடத்தக்கது. அந்த வரிசையில், மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் இந்த அந்தஸ்த்தை பெற்றிருக்கிறது.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் கிளவுட் கம்ப்யூடிங் பிரிவான அஸ்யூர் அதிக வருவாய் ஈட்டிக் கொடுத்ததே அந்தஸ்த்து அதிகரிக்க முக்கிய காரணம் என கூறப்படுகிறது. அமேசான் வெப் சேவைகளுக்கு கடும் போட்டியாளரான அஸ்யூர் வருவாய் வருடாந்திர அடிப்படையில் 40 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.

கிளவுட் கம்ப்யூடிங் பிரிவில் மைக்ரோசாப்ட் ஆதிக்கம் மேலும் அதிகரிக்கும் என்றும், இதன் சந்தை மதிப்பு மேலும் அதிகரிக்கவும் வாய்ப்புகள் அதிகம் என தெரிகிறது. இதேபோன்று செயற்கை நுண்ணறிவு மற்றும் எதிர்கால தொழில்நுட்பங்களிலும் கவனம் செலுத்தும் போது மைக்ரோசாப்ட்-இன் மதிப்பு மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

நன்றி தமிழன்

Latest news

Coles கடைகளில் இன்று முதல் கத்தி விற்பனைக்கு தடை

ஆஸ்திரேலியாவின் பிரபல பல்பொருள் அங்காடியான Coles-இல் இனி கத்தி விற்பனையை நிறுத்தியுள்ளது. 13 வயது சிறுவன் ஊழியர் ஒருவரை குத்தியதை அடுத்து நாடு முழுவதும் உள்ள Coles...

சர்வதேச தலையீடு இல்லாமல் சுதந்திரமாக மாற ஆஸ்திரேலியாவிடமிருந்து ஒரு புதிய திட்டம்

சர்வதேச தலையீடுகளில் இருந்து சுதந்திரமாக இருக்க ஆஸ்திரேலிய அரசு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. வெளிநாட்டு தாக்கங்கள் காரணமாக அவுஸ்திரேலியாவின் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் தேசிய நலன்கள் அச்சுறுத்தலுக்கு...

தென்கொரிய அதிபர் கைது

தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பரில் நாட்டில் இராணுவச் சட்டத்தை விதித்து கிளர்ச்சியை ஏற்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்...

ஆஸ்திரேலியர்கள் அதிகம் நீக்கும் சமூக ஊடகம் பற்றி வெளியான அறிக்கை

ஆஸ்திரேலியர்கள் தங்கள் தொலைபேசிகளில் இருந்து நீக்க வேண்டிய சமூக ஊடக பயன்பாடுகள் தொடர்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, எத்தனை ஸ்மார்ட்போன் உரிமையாளர்கள் தங்கள் தொலைபேசிகளில் இருந்து...