Newsவெளியீட்டுக்கு தாயாராகும் கேலக்ஸி ரிங்

வெளியீட்டுக்கு தாயாராகும் கேலக்ஸி ரிங்

-

சம்சங் நிறுவனம் தனது கேலக்ஸி ரிங் பற்றிய டீசரை சமீபத்தில் நடைபெற்று முடிந்த கேலக்ஸி அன்பேக்ட் 2024 நிகழ்வில் வெளியிட்டது. எனினும், இது பற்றிய விவரங்கள் அதிகளவில் வெளியாகவில்லை. எனினும், இதில் உடல் ஆரோக்கியம் சார்ந்த ஏராளமான அம்சங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இது தொடர்பான டீசரில் கேலக்ஸி ரிங் சாதனம் சில்வர் நிறம் கொண்டிருக்கும் என தெரியவந்தது.

புதிய கேலக்ஸி ரிங் சாதனத்தை பயன்படுத்தியதாக டெக் துறையை சேர்ந்த கிரீன்கார்ட் தெரிவித்துள்ளார். இந்த சாதனத்தை தன்னால் புகைப்படம் எடுக்க முடியவில்லை என்றும், சிறிது நேரம் அதை பயன்படுத்தியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி, கேலக்ஸி ரிங் சாதனம் மிக குறைந்த எடை கொண்டிருக்கும் என்றும் இது பல்வேறு அளவுகளில் கிடைக்கும் என்றும் தெரியவந்துள்ளது. புதிய சாதனம் அதிகபட்சம் மூன்றுவித நிறங்களில் கிடைக்கும் என கூறப்படுகிறது. இது தொடர்பாக சம்சங் வெளியிட்ட டீசரில் கேலகிஸி ரிங் சில்வர் நிறம் கொண்டிருந்தது.

இந்த ஆண்டு இறுதிக்குள் விற்பனைக்கு வரவிருக்கும் கேலக்ஸி ரிங் விலை விவரங்கள் மற்றும் இதர அம்சங்கள் பற்றி எந்த தகவலும் இல்லை. தற்போதைய தகவல்களின் படி ஜூலை அல்லது ஒகஸ்ட் மாதம் நடைபெறும் கேலக்ஸி அன்பேக்டு நிகழ்வில் கேலக்ஸி ரிங் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கலாம்.

நன்றி தமிழன்

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...