Newsகுரங்குகளுக்கான நகரை உருவாக்கும் அமெரிக்கா!

குரங்குகளுக்கான நகரை உருவாக்கும் அமெரிக்கா!

-

அமெரிக்காவைச் சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனமான ‘சேபர் ஹியூமன் மெடிசின்ஸ்’ தொடர்ந்து மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் ஜார்ஜியா மாகாணத்தின் பெய்ன்பிரிட்ஜ் நகருக்கு அருகே சுமார் 30,000 குரங்குகள் வசிக்க 200 ஏக்கரில் ஒரு நகரை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

இங்கு இனப்பெருக்கம் செய்யப்பட்டு வளர்க்கப்படும் நீண்டவால் குரங்குகளை பல்கலைக்கழகங்கள் மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு மருத்துவ ஆய்வுக்கு அனுப்பி வைக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதிவாசி டேவிட் பார்பர் கூறும் போது, “பெய்ன்பிரிட்ஜ் நகரில் சுமார் 14 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இந்நகரில் 30 ஆயிரம் குரங்குகளை வளர்த்தால் எங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். எனவே இந்த திட்டத்தை உடனடியாக கைவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

இதுபோல, மருத்துவ ஆராய்ச்சிக்காக குரங்குகளை ஓரிடத்தில் அடைத்து வைத்து இனப்பெருக்கம் செய்வது கொடூரமானது என விலங்குகள் நல அமைப்புகள் தெரிவித்துள்ளன.

நன்றி தமிழன்

Latest news

இஸ்ரேலிய ஜனாதிபதியின் ஆஸ்திரேலிய பயணம் குறித்து அல்பானீஸ் சிறப்பு அறிக்கை

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் ஆஸ்திரேலியா பயணம் குறித்த விமர்சனங்களுக்கு மத்தியில் பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தனது முடிவை ஆதரித்துள்ளார். டிசம்பர் 14 ஆம் திகதி Bondi...

அமெரிக்க-ரஷ்யா அணுசக்தி ஒப்பந்தத்தின் முடிவு உலக முடிவின் தொடக்கமா?

உலகின் இரண்டு சக்திவாய்ந்த அணுசக்தி நாடுகளான அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையிலான அணு ஆயுதக் கட்டுப்பாட்டு ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாக முடிவுக்கு வந்துள்ளதால், உலகம் கடுமையான ஆபத்தை எதிர்கொள்கிறது...

குழந்தை பருவ தடுப்பூசிகள் இல்லாததால் ஆஸ்திரேலியாவில் ஆபத்து உள்ள குழந்தைகளின் உயிர்கள்

ஆஸ்திரேலியா முழுவதும் Whooping இருமல் நோய் வேகமாகப் பரவி வருவதாக சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். கடந்த 30 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஆஸ்திரேலியாவில் இப்போது அதிக எண்ணிக்கையிலான...

12 மற்றும் 13 வயதுடைய இரு NSW சிறுவர்கள் பல கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது

நியூ சவுத் வேல்ஸின் Upper Hunter Shire-இல் உள்ள Scone நகரில் ஒரு கடையில் நடந்த கொள்ளை தொடர்பாக 12 மற்றும் 13 வயதுடைய இரண்டு...

12 மற்றும் 13 வயதுடைய இரு NSW சிறுவர்கள் பல கடுமையான குற்றச்சாட்டுகளின் பேரில் கைது

நியூ சவுத் வேல்ஸின் Upper Hunter Shire-இல் உள்ள Scone நகரில் ஒரு கடையில் நடந்த கொள்ளை தொடர்பாக 12 மற்றும் 13 வயதுடைய இரண்டு...

ஆஸ்திரேலியாவில் அதிகரித்து வரும் பயங்கரவாத அச்சுறுத்தல்கள்

ஆஸ்திரேலியாவில் பயங்கரவாத அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாகவும், குறிப்பாக தனிநபர்களால் நடத்தப்படும் பயங்கரவாதச் செயல்களை அடையாளம் காண்பது ஒரு பெரிய சவாலாக இருப்பதாகவும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆன்லைனில் செயல்படும்...