Newsகுரங்குகளுக்கான நகரை உருவாக்கும் அமெரிக்கா!

குரங்குகளுக்கான நகரை உருவாக்கும் அமெரிக்கா!

-

அமெரிக்காவைச் சேர்ந்த மருந்து உற்பத்தி நிறுவனமான ‘சேபர் ஹியூமன் மெடிசின்ஸ்’ தொடர்ந்து மருந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்நிறுவனம் ஜார்ஜியா மாகாணத்தின் பெய்ன்பிரிட்ஜ் நகருக்கு அருகே சுமார் 30,000 குரங்குகள் வசிக்க 200 ஏக்கரில் ஒரு நகரை உருவாக்க திட்டமிட்டுள்ளது.

இங்கு இனப்பெருக்கம் செய்யப்பட்டு வளர்க்கப்படும் நீண்டவால் குரங்குகளை பல்கலைக்கழகங்கள் மற்றும் மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு மருத்துவ ஆய்வுக்கு அனுப்பி வைக்க இந்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதுகுறித்து அப்பகுதிவாசி டேவிட் பார்பர் கூறும் போது, “பெய்ன்பிரிட்ஜ் நகரில் சுமார் 14 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். இந்நகரில் 30 ஆயிரம் குரங்குகளை வளர்த்தால் எங்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படும். எனவே இந்த திட்டத்தை உடனடியாக கைவிட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்” என்றார்.

இதுபோல, மருத்துவ ஆராய்ச்சிக்காக குரங்குகளை ஓரிடத்தில் அடைத்து வைத்து இனப்பெருக்கம் செய்வது கொடூரமானது என விலங்குகள் நல அமைப்புகள் தெரிவித்துள்ளன.

நன்றி தமிழன்

Latest news

மறைந்து போகும் சனி கிரகத்தின் வளையம்

சனியின் சின்னமான வளையங்கள் மறைந்துவிட்டதாக விஞ்ஞானிகள் அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். இது ஒரு அரிய நிகழ்வு என்றும், சனியின் மேற்பரப்பில் வளையங்களாகத் தோன்றும் தூசித் துகள்கள்...

ஜெசிந்தாவைப் புகழ்ந்து பேசிய பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், விக்டோரியன் பிரதமர் ஜெசிந்தா ஆலனின் நாட்டைப் பாதுகாக்கும் திட்டத்தை ஆதரிப்பதாகக் கூறுகிறார். நேற்று காலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பிரதமர் இந்தக்...

ஆஸ்திரேலியாவின் பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு உள்ள $940 பில்லியன் கடன்

ஆஸ்திரேலிய அரசாங்கம் 2024/25 ஆம் ஆண்டில் மொத்தக் கடனை $940 பில்லியனாகக் கட்டுப்படுத்தத் தயாராகி வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட் இன்றிரவு தாக்கல் செய்யப்பட உள்ளது. நாட்டின் பொறுப்பான...

விக்டோரியா பெரும் செல்வத்தை ஈட்டுகிறது – பிரதமர் அல்பானீஸ்

விக்டோரியாவை ஆஸ்திரேலியாவின் போக்குவரத்து மையமாக மாற்றுவதாக பிரதமர் அந்தோணி அல்பானீஸ் உறுதியளித்துள்ளார். வரவிருக்கும் கூட்டாட்சித் தேர்தலை இலக்காகக் கொண்டு மெல்பேர்ணில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றும் போதே அவர்...

ஆஸ்திரேலியாவின் பட்ஜெட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு உள்ள $940 பில்லியன் கடன்

ஆஸ்திரேலிய அரசாங்கம் 2024/25 ஆம் ஆண்டில் மொத்தக் கடனை $940 பில்லியனாகக் கட்டுப்படுத்தத் தயாராகி வருகிறது. இந்த ஆண்டுக்கான பட்ஜெட் இன்றிரவு தாக்கல் செய்யப்பட உள்ளது. நாட்டின் பொறுப்பான...

தனிமையில் வாடும் இளைஞர்களைப் பற்றி மெல்பேர்ணில் இருந்து வெளியாகிய ஆய்வு

ஆஸ்திரேலியாவில் அதிக எண்ணிக்கையிலான இளைஞர்கள் தனிமையை அனுபவிப்பதாக மெல்பேர்ண் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்தக் குழுவில் 15 முதல் 24 வயதுடைய ஆஸ்திரேலியர்கள் முதலிடத்தில் இருப்பதாகக்...