Newsதிடீரென மூடப்பட்ட ஈபிள் கோபுரம் - சிறமத்துக்குள்ளான ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்

திடீரென மூடப்பட்ட ஈபிள் கோபுரம் – சிறமத்துக்குள்ளான ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள்

-

உலக சுற்றுலாத் தலங்களில் ஒன்றான பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரம் ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

ஈபிள் கோபுரத்தின் நிதி விவகாரங்கள் முறையாக நிர்வகிக்கப்படாமை மற்றும் செலவுகள் மிகைப்படுத்தப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டி ஈபிள் கோபுரத்தின் தொழிற்சங்கங்கள் நேற்று முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈபிள் டவர் ஊழியர்கள் வேலைநிறுத்தம் செய்வது இது இரண்டாவது முறையாகும்.

எதிர்வரும் ஒலிம்பிக் போட்டிகளுக்கு முன்னதாக இங்கு சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் எனவும், அதற்கான பணப்பற்றாக்குறை காரணமாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள முடியாதுள்ளதாகவும் தொழிலாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இந்த ஆண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸின் பாரிஸில் ஜூலை 26 முதல் ஆகஸ்ட் 11 வரை நடைபெற உள்ளது, திருவிழாவின் போது தொழிலாளர்கள் மற்றொரு வேலைநிறுத்தம் செய்வது குறித்து குறிப்புகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

வருடத்திற்கு ஏறக்குறைய 7 மில்லியன் உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் ஈபிள் கோபுரத்திற்கு வருகை தருவதாகவும், நேற்று கோபுரத்தை மூடியதன் மூலம் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரான்ஸ் தலைநகரில் இவ்வருடம் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுவதால், பாரிஸுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் எனவும், அந்தக் காலப்பகுதியில் மீண்டும் வேலைநிறுத்தப் போராட்டத்தை ஆரம்பிப்பது பொருத்தமான சூழ்நிலையல்ல எனவும் விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...