Sydneyதற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள சிட்னியில் மெட்ரோ சேவைகள்

தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ள சிட்னியில் மெட்ரோ சேவைகள்

-

ரயில் பாதைகளை விரிவுபடுத்துவதற்காக சிட்னியின் வடமேற்கு பகுதியில் மெட்ரோ சேவைகளை தற்காலிகமாக நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அதன்படி, சிட்னி மெட்ரோ பயணிகள் மார்ச் மற்றும் ஏப்ரல் வார இறுதி நாட்களில் தங்கள் பயணத்திற்கு பேருந்துகளைப் பயன்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதனால் மார்ச் 2, மார்ச் 9, மார்ச் 16, மார்ச் 23, ஏப்ரல் 6 மற்றும் ஏப்ரல் 13 ஆகிய வார இறுதி நாட்களில் மெட்ரோ சேவைகள் ரத்து செய்யப்படும்.

மெட்ரோ சேவைகளை Chatswood தாண்டி, CBD வழியாக மற்றும் Sydenham வரை விரிவுபடுத்தும் நோக்கத்துடன் இந்த ஆண்டு ரயில் சேவைகளை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மெட்ரோ சேவைகளுக்கு பதிலாக பேருந்துகள் வரும் நேரத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வார இறுதியிலும் சனிக்கிழமைகளில் அதிகாலை 2 மணி முதல் திங்கள் கிழமைகளில் அதிகாலை 2 மணி வரை பேருந்துகள் இயக்கப்படும்.

தற்போதுள்ள சிட்னியின் வடமேற்குப் பாதைக்கும் புதிய கட்டுமானப் பிரிவுக்கும் இடையில் இடையூறு இல்லாமல் மெட்ரோ சேவைகளை மேற்கொள்ள முடியுமா என்பதை உறுதிப்படுத்த இந்தக் காலப்பகுதியில் மேற்கொள்ளப்பட உள்ளது.

Latest news

ஆஸ்திரேலிய கடைக்காரர்களை முட்டாளாக்கும் உணவு லேபிள்கள்

சில உணவு லேபிள்களின் குழப்பமான நிலையால் ஆஸ்திரேலியாவில் கடைக்காரர்கள் தவறாக வழிநடத்தப்படுவதாக புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. ஆரோக்கியமான உணவுத் தேர்வுகளைச் செய்ய முயற்சிப்பதால், ஆஸ்திரேலியர்கள் இனி இந்த...

லெபனான் தலைநகர் பெய்ரூட்டை வான்வழியாக தாக்கிய இஸ்ரேல்

லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் இஸ்ரேல் இராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக பெய்ரூட்டில் உள்ள ஹிஸ்புல்லா அமைப்புகளின் நிலைகளைக் குறிவைத்து இஸ்ரேல்...

கிடு கிடுவென உயர்ந்த Bitcoin-இன் மதிப்பு

உலக வல்லரசான அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தல் Bitcoin மதிப்பை எகிறச்செய்துள்ளது. ட்ரம்பின் வெற்றி Cryptocurrency-யில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக crypto-வின்...

வெளியுலகம் கண்டிராத வட கொரியாவின் புகைப்படங்கள்

சர்வதேச சமூகத்தில் இருந்து தன்னை தனிமைப்படுத்திக் கொண்ட நாடாக வட கொரியா உள்ளது. அதன் ஜனாதிபதியாக கடந்த 2011 முதல் கிம் ஜாங் உன் ...