Newsபூமித்தாயின் மடியில் மீளாத் துயில் கொண்டார் சாந்தன்

பூமித்தாயின் மடியில் மீளாத் துயில் கொண்டார் சாந்தன்

-

சாந்தனின் பூதவுடல் நேற்று (4ம் திகதி) மாலை 7 மணிக்கு எள்ளங்குளம் இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

கல்லீரல் செயலிழப்பு மற்றும் பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டிருந்த அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். இந்நிலையில், பெப்ரவரி 28ஆம் திகதி அதிகாலை சாந்தன் காலமானார்.

இந்நிலையில் அவரது உடல் கடந்த வெள்ளிக்கிழமை விமானம் வழியாக கட்டுநாயக்க விமான நிலையம் எடுத்து வரப்பட்டு, உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

வவுனியாவிலிருந்து யாழ்ப்பாணம் வரை அலங்கரிக்கப்பட்ட ஊர்தியில் சாந்தனின் உடல் எடுத்து செல்லப்பட்டது. வவுனியா, மாங்குளம், கிளிநொச்சி, பளை, கொடிகாமம் என பல இடங்களிலும் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டு, நேற்று ஞாயிற்றுக்கிழமை அவரது சொந்த ஊரான உடுப்பிட்டிக்கு எடுத்து செல்லப்பட்டது.

நேற்று முன்தினம் தீருவிலில் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின்னர், உடுப்பிட்டி, இலக்கணாவத்தையிலுள்ள சாந்தனின் சகோதரியின் வீட்டில் அஞ்சலிக்காக உடல் வைக்கப்பட்டிருந்தது.

நேற்று காலையில் இறுதிச்சடங்குகள் நடந்து, உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இலக்கணாவத்தை சனசமூக நிலையத்தில் அஞ்சலிக் கூட்டம் நடந்தது.

இதை தொடர்ந்து உடல் வாகன பேரணியாக வல்வெட்டித்துறையிலுள்ள தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வே.பிரபாகரனின் இல்லத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அந்த இல்லத்தின் வாயிலில் அஞ்சலிக்காக சிறிது தரித்து பயணித்தது.

பின்னர் வல்வெட்டித்துறை- பொலிகண்டி ஊடாக எள்ளங்குளம் மாவீரர் துயிலுமில்லத்துக்கு அண்மையிலுள்ள எள்ளங்குளம் இந்து மயானத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

Latest news

விக்டோரியா காவல்துறையின் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்ட வெளிநாட்டவர்

நியூசிலாந்து முன்னாள் காவல் ஆணையர் Mike Bush, விக்டோரியா காவல்துறையின் தலைமை ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் ஜூன் 27 அன்று பதவியேற்பார். விக்டோரியா காவல்துறையில் ஏற்பட்ட தலைமை...

உலகின் சிறந்த மருத்துவர்களாக ஆஸ்திரேலிய மருத்துவர்கள்

உலகின் சிறந்த மருத்துவர்களைக் கொண்ட நாடுகளில் ஆஸ்திரேலியா ஒரு உயர் இடத்தைப் பிடித்துள்ளது. சுகாதாரப் பராமரிப்பு என்பது ஒரு உன்னதமான தொழில், இது பல வருட கல்வி...

பிரதமர் அல்பானீஸின் 2வது பதவிக்காலத்தில் ஆஸ்திரேலியாவில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படும்?

பிரதம மந்திரி அந்தோணி அல்பானீஸ் மற்றும் தொழிலாளர் கட்சி பில்லியன் கணக்கான டாலர்களை உறுதியளித்து இரண்டாவது முறையாக வெற்றி பெற்றுள்ளார். அதன்படி, எதிர்காலத்தில் பல மாற்றங்கள் ஏற்படும்...

பூமியில் விழ காத்திருக்கும் காஸ்மோஸ் 482 விண்கலம்

வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்காக சோவியத் யூனியன் 1972ம் ஆண்டு அனுப்பப்பட்ட காஸ்மோஸ் 482 எனும் விண்கலம் அதிக வெப்பத்தை தாங்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் டைமர்...

பூமியில் விழ காத்திருக்கும் காஸ்மோஸ் 482 விண்கலம்

வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்காக சோவியத் யூனியன் 1972ம் ஆண்டு அனுப்பப்பட்ட காஸ்மோஸ் 482 எனும் விண்கலம் அதிக வெப்பத்தை தாங்கும் அளவுக்கு வடிவமைக்கப்பட்டிருந்தது. ஆனால் டைமர்...

ஆஸ்திரேலியாவில் உயர்நிலைப் பள்ளிகளுக்கு ஓட்டுநர் பயிற்சியா?

உயர்நிலைப் பள்ளி பாடத்திட்டத்தில் ஓட்டுநர் பாடநெறிகளை அறிமுகப்படுத்தும் முடிவில் உள்ளூர் அரசாங்கங்களும் அரசு சாரா பள்ளி அதிகாரிகளும் கவனம் செலுத்த வேண்டும் என்று கல்வித் துறை...