Newsகனடாவில் 6 இலங்கையர்களைக் கொன்ற இலங்கை மாணவர்!

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொன்ற இலங்கை மாணவர்!

-

கனடாவின் ஒட்டாவாவில் உள்ள வீடொன்றில் வைத்து இலங்கையைச் சேர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் குடும்பத்தின் தாய் மற்றும் பிள்ளைகள் அடங்குவதாகவும் தந்தை படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

கனேடிய உயர்ஸ்தானிகராலயத்தின் அறிக்கையை மேற்கோள்காட்டி பிபிசி உலகச் சேவை, இறந்தவர்கள் இலங்கை குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்று கூறியுள்ளது.

உயிரிழந்த 6 பேரும் கனடாவுக்கு புதிதாக வந்தவர்கள் எனவும், உயிரிழந்த இளைய குழந்தைக்கு மூன்று மாதங்களுக்கும் குறைவான வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது

குடும்பத்துடன் வசித்து வந்த 19 வயதுடைய இலங்கை மாணவன் ஒருவரே கொலைக்குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளார்.

உயிரிழந்தவர்களில் 35 வயதான தர்ஷனி டிலந்திகா ஏகநாயக்க மற்றும் அவரது நான்கு பிள்ளைகளான 7 வயதான இனுகா விக்ரமசிங்க, 4 வயதான அஷ்வினி விக்ரமசிங்க, 2 வயதான ரின்யான விக்கிரமசிங்க மற்றும் இரண்டு மாத குழந்தை கெல்லி விக்ரமசிங்க ஆகியோர் அடங்குவர்.

உயிரிழந்த ஆறாவது நபர் 40 வயதான காமினி அமரகோன் என்பதுடன், அவர் அதே வீட்டில் வசித்த குடும்பத்தின் உறவினர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 19 வயதுடைய ஃபேப்ரியோ டி சொய்சா என அடையாளம் காணப்பட்ட பொலிசார், அவர் மீது கொலை மற்றும் கொலை முயற்சி ஆகிய 6 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

இந்த சம்பவம் ஒட்டாவாவின் சமீபத்திய வரலாற்றில் மிகப்பெரிய கொலையாகும், இது ஒரு உண்மையான சோகம், இது கனடாவின் தலைநகரில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என்று ஒட்டாவாவின் மேயர் கூறினார்.

நகரத்தின் வரலாற்றில் நடந்த வன்முறைச் செயல்களில் மிகவும் அதிர்ச்சியளிக்கும் ஒரு கொலை என்று அவர் விவரித்தார்.

கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

Latest news

சர்ச்சைக்குரிய வரிவிதிப்பு நிறைவேற்றம் – போராட்டம் நடத்த உள்ள தீயணைப்பு வீரர்கள்

அதிகாலையில் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள சேவை வரி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, கோபமடைந்த விவசாயிகளும் CFA தன்னார்வலர்களும் நாடாளுமன்றத்தின் முன் போராட்டம் நடத்துவார்கள் என...

விவசாயிகளுக்கு $15.9 மில்லியன் உதவியை அறிவித்துள்ள விக்டோரியா அரசு 

நீண்டகால வறட்சியை எதிர்கொள்ளும் விவசாயிகளுக்கு விக்டோரியன் அரசு 15.9 மில்லியன் டாலர் நிதி உதவியை அறிவித்துள்ளது. இந்த நிதி, முன்னர் அரசாங்க நிவாரணம் பெற்ற 11 நகரங்களுடன்...

போலி ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் போலி ஆவணங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக முன்னணி வழக்கறிஞர்களின் பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. "போலி ID" என்ற சொல் ஒவ்வொரு மாநிலத்திலும் தொடர்ந்து தேடப்பட்டு வருவதாகவும், போலி IDகள்...

இந்தோனேசிய ஜனாதிபதியின் பூனையை கொஞ்சிய பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், இந்தோனேசிய அதிபரின் பூனையான 'பாபி'யை செல்லமாக வளர்ப்பது போன்ற காட்சியை ஊடகங்கள் செய்தியாக வெளியிட்டு வருகின்றன. இந்தோனேசிய அதிகாரப்பூர்வ விஜயத்தின் போது...

போலி ஓட்டுநர் உரிமங்களைப் பயன்படுத்தியதற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனை

ஆஸ்திரேலியாவில் போலி ஆவணங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளதாக முன்னணி வழக்கறிஞர்களின் பகுப்பாய்வு வெளிப்படுத்தியுள்ளது. "போலி ID" என்ற சொல் ஒவ்வொரு மாநிலத்திலும் தொடர்ந்து தேடப்பட்டு வருவதாகவும், போலி IDகள்...

சிட்னி தெருவில் படகுகளை நிறுத்தியவர்களுக்கு $28,000 அபராதம்

ஆஸ்திரேலியாவின் Randwick நகர சபை, புறநகர் வீதிகளில் படகுகள் மற்றும் டிரெய்லர்களை நிறுத்துபவர்களுக்கு $28,000 அபராதம் விதித்துள்ளது. வாடிக்கையாளர் புகார்களின் அடிப்படையில் 400 வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக...