ஐரோப்பிய ஒன்றியத்தின் காலநிலைச் சேவையின்படி, கடந்த மாதம், சமீப காலங்களில் உலகின் மிக வெப்பமான பிப்ரவரி மாதமாக இருந்தது.
ஜூன் 2023 முதல் ஒவ்வொரு மாதமும் வெப்பநிலை படிப்படியாக அதிகரித்து வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
உலகின் கடல் பரப்பின் வெப்பநிலை சாதனை அளவை எட்டியுள்ளதோடு, அண்டார்டிக் கடல் பகுதியின் பனிப் படலமும் மிகக் குறைந்த அளவை எட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
பசிபிக் பெருங்கடலில் எல் நினோ வானிலை நிகழ்வு காரணமாக வெப்பநிலை இன்னும் அதிகரித்து வருகிறது என்றாலும், மனிதனால் ஏற்படும் காலநிலை மாற்றமே வெப்பமயமாதலுக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.
கிரீன்ஹவுஸ் வாயுக்களின் வெளியேற்றமும் இந்த நிலைக்குக் காரணம் என்று உலக வானிலை அமைப்பின் பொதுச் செயலாளர் பேராசிரியர் செலஸ்டெ சோலோ வலியுறுத்துகிறார்.
குறிப்பாக மேற்கு ஆஸ்திரேலியா, தென்கிழக்கு ஆசியா, தென்னாப்பிரிக்கா மற்றும் தென் அமெரிக்கா ஆகியவை நிலவும் தீவிர வெப்பநிலையால் பாதிக்கப்பட்டுள்ளன.