Sports2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் திரில் வெற்றி - IPL 2024

2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் திரில் வெற்றி – IPL 2024

-

IPL கிரிக்கெட் தொடரில் பஞ்சாப் மாநிலம் முல்லாப்பூரில் நடைபெற்ற 23-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணிகள் மோதின.

இதில் நாணயசுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி, ஐதராபாத் அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டிராவிஸ் ஹெட் 21 ஓட்டங்களும், அபிஷேக் சர்மா 16 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர். அடுத்து களமிறங்கிய மார்க்ரம் ஓட்டம் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். பின்னர் வந்த நிதிஷ் ரெட்டி, அதிரடி காட்டினார். சிறப்பாக விளையாடி அரைசதமடித்த அவர், 64 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

அப்துல் சமத் 25 ஓட்டங்கள் எடுத்தார். இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 182 ஓட்டங்கள் எடுத்துள்ளது. பஞ்சாப் தரப்பில் அர்ஷ்தீப் சிங் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனை தொடர்ந்து 183 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பஞ்சாப் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் , பேர்ஸ்டோ ஆகியோர் களமிறங்கினர். தொடக்கத்தில் பஞ்சாப் அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த அணியில் பேர்ஸ்டோ ஓட்டம் எதுவும் எடுக்காமலும் , பிரப்சிம்ரன் சிங் 4 ஓட்டங்களும் , தவான் 14 ஓட்டங்களும் எடுத்து ,ஆட்டமிழந்தனர்.

பின்னர் சாம் கரன் , ஷிகந்தர் ராசா ஆகியோர் நிலைத்து ஆடி ஓட்டங்களை குவித்தனர். அணியின் ஸ்கோரை 58ரன்னாக இருந்தபோது சாம் கரன் 29 ஓட்டங்களில் வெளியேறினார். தொடர்ந்து ஷிகந்தர் ராசா 28 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

பின்னர் களமிறங்கிய ஷசாங் சிங் , அஷுதோஷ் சர்மா இருவரும் அதிரடி காட்டினர். கடைசி ஓவரில் 29 ஓட்டங்கள் தேவைப்பட்ட நிலையில் பஞ்சாப் அணியால் 26 ஓட்டங்கள் மட்டும் எடுக்க முடிந்தது. ஷசாங் சிங் 25 பந்துகளில் 46 ஓட்டங்களும் , அஷுதோஷ் சர்மா 12 பந்துகளில் 28 ஓட்டங்களும் எடுத்தனர். இதனால் 2 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் திரில் வெற்றி பெற்றது.

Latest news

ஆஸ்திரேலியர்கள் ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம் – பிரதமர் அல்பானீஸ்

ஆஸ்திரேலியர்கள் ஈரானுக்குப் பயணம் செய்ய வேண்டாம் என்று பிரதமர் அல்பானீஸ் வலியுறுத்துகிறார். ஈரானிய தூதர் தெஹ்ரானுக்குப் புறப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு பிரதமர் இந்த அறிவிப்பை...

இந்தியாவுடன் வலுவான வர்த்தக ஒப்பந்தம் செய்வோம் என கூறிய ஆஸ்திரேலிய அமைச்சர்கள்

அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் விதித்த வரிகள் குறித்து ஆஸ்திரேலிய வர்த்தக மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக வர்த்தக அமைச்சர் Don Farell, இந்தியாவுடன் வலுவான...

ஆஸ்திரேலிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் டிரம்ப் கொடுக்கும் அழுத்தம்

ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகள் மீது தொழில்நுட்ப வரிகள் மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது அமெரிக்க...

ஆஸ்திரேலியாவில் கட்டாயத் திருமணம் நிறுத்தப்பட வேண்டும்!

கட்டாயத் திருமணங்கள் குறித்த அறிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை மற்றும் சமூக அமைப்புகளின் அறிக்கைகள் இதை நிரூபிக்கின்றன. பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு முன்பே திருமணம்...

ஆஸ்திரேலியாவில் கட்டாயத் திருமணம் நிறுத்தப்பட வேண்டும்!

கட்டாயத் திருமணங்கள் குறித்த அறிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை மற்றும் சமூக அமைப்புகளின் அறிக்கைகள் இதை நிரூபிக்கின்றன. பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு முன்பே திருமணம்...

16 வயது சிறுவனின் மரணத்திற்கு காரணமான ChatGPT

16 வயது சிறுவனின் மரணத்திற்கு ChatGPT காரணமாக இருந்ததாகக் கூறி, OpenAI மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் OpenAI மற்றும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி...