Sportsபஞ்சாப் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் - IPL 2024

பஞ்சாப் அணியை வீழ்த்தியது ராஜஸ்தான் – IPL 2024

-

IPL கிரிக்கெட் தொடரில் முல்லன்பூரில் நடைபெற்ற 27-வது லீக் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதின. நாணயசுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அதர்வ தைடே மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் களம் இறங்கினர். இதில் அதர்வா தைடே 18 ஓட்டங்களிலும், அடுத்து வந்த ப்ரப்சிம்ரன் சிங் 10 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதையடுத்து பேர்ஸ்டோவுடன் அணி தலைவர் சாம் கர்ரன் ஜோடி சேர்ந்தார். இதில் பேர்ஸ்டோ 15 ஓட்டங்களிலும், சாம் கர்ரன் 6 ஓட்டங்களிலும், அடுத்து களம் இறங்கிய ஷஷாங் சிங் 9 ஓட்டங்களிலும் ஆட்டமிழந்தனர். இதையடுத்து ஜோடி சேர்ந்த ஜித்தேஷ் சர்மா மற்றும் லிவிங்ஸ்டன் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

இதில் ஜித்தேஷ் சர்மா 29 ஓட்டங்களில் ஆட்டமிழக்க. இதையடுயடுத்து ப்ரப்சிம்ரன் சிங்கிற்கு பதிலாக இம்பேக்ட் வீரராக அசுதோஷ் சர்மா களம் புகுந்தார். இறுதியில் பஞ்சாப் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 147 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் தரப்பில் அதிகபட்சமாக அசுதோஷ் சர்மா 31 ஓட்டங்களும், ஜித்தேஷ் சர்மா 29 ஓட்டங்களும் எடுத்தனர்.

ராஜஸ்தான் தரப்பில் அவேஷ் கான், கேசவ் மகராஜ் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதையடுத்து 148 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ராஜஸ்தான் அணி விளையாடியது.

தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் , தனுஷ் கோட்யான் ஆகியோர் களமிறங்கினர். தொடக்கம் முதல் இருவரும் சிறப்பாக விளையாடினர். தொடக்க விக்கெட்டுக்கு 56 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் தனுஷ் கோட்யான் 24 ஓட்டங்களில் வெளியேறினார்.

தொடர்ந்து ஜெய்ஸ்வால் 9 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து களமிறங்கிய அணித் தலைவர் சஞ்சு சாம்சன் 14 பந்துகளில் 18 ஓட்டங்களும் , ரியான் பராக் 18 பந்துகளில் 23 ஓட்டங்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

கடைசி ஓவரில் ராஜஸ்தான் அணியின் வெற்றிக்கு 10 ஓட்டங்கள் தேவைப்பட்டது . பஞ்சாப் அணியின் அர்ஷிதீப் சிங் கடைசி ஓவரை வீசினார். அந்த ஓவரை எதிர்கொண்ட ஹெட்மயர் 2 சிக்சர்கள் பறக்க விட்டார். இதனால் ராஜஸ்தான் அணி 19.5 ஓவரில் 152 ஓட்டங்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஹெட்மயர் 10 பந்துகளில் 27 ஓட்டங்கள் எடுத்தார்.

Latest news

விக்டோரியாவில் சொத்து பாதுகாப்பு குறித்து விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

குற்றப் புள்ளியியல் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, கடந்த காலாண்டில் விக்டோரியாவில் குற்றச் சம்பவங்கள் மேலும் அதிகரித்துள்ளன. அதிக குற்ற விகிதங்களைக் கொண்ட பிற பகுதிகள் Yarra...

2025இல் ஆஸ்திரேலியாவில் அதிகம் விற்பனையான வாகனங்கள்

2025 ஆம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலிய கார் சந்தையில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கார் உரிமையாளர்கள் அதிகளவில் எரிபொருள் திறன் கொண்ட, குறைந்த உமிழ்வு...

ரொபோக்களுக்கு உயிர்கொடுக்கும் மின்னணு தோல்

மனிதர்கள் செய்யும் அனைத்து வேலைகளையுமே தற்போது ரொபோக்களும் செய்ய ஆரம்பித்துவிட்டன. அந்த வகையில் மனிதர்களைப் போலவே ரொபோக்களும் வலி மற்றும் உணர்வுகளை உணர்ந்து எதிர்வினை ஆற்றும் வகையிலான...

“நான் நிரபராதி. நான் ஒரு நல்ல மனிதன்” – நீதிமன்றத்தில் வெனிசுலா அதிபர்

போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது. 63 வயதான மதுரோ, நேற்று காலை நியூயார்க் கூட்டாட்சி...

“நான் நிரபராதி. நான் ஒரு நல்ல மனிதன்” – நீதிமன்றத்தில் வெனிசுலா அதிபர்

போதைப்பொருள் பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளில் வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ குற்றவாளி அல்ல என்று நீதிமன்றம் ஒன்று தெரிவித்துள்ளது. 63 வயதான மதுரோ, நேற்று காலை நியூயார்க் கூட்டாட்சி...

சிட்னியின் மேற்கில் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட பின் ஒருவர் மரணம்

சிட்னியின் மேற்கு Homebush பகுதியில், குடும்ப வன்முறை புகாரைத் தொடர்ந்து கைது செய்யச் சென்றபோது, ​​காவல்துறையினரால் மிளகு தெளிக்கப்பட்டதில் 52 வயது நபர் உயிரிழந்தார். இந்த சம்பவம்...