பெர்த்தில் உள்ள வீடொன்றில் இருவரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
நேற்று பிற்பகல் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்படி, கோல்ஃப் லிங்க்ஸ் டிரைவில் உள்ள வீடொன்றில் இந்த இருவரின் சடலங்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இறந்தவர்களின் அடையாளம் அல்லது மரணத்திற்கான சரியான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை.
இது தொடர்பில் புலனாய்வு அதிகாரிகள் உள்ளிட்ட பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும், சம்பவம் தொடர்பில் யாருக்கேனும் தகவல் தெரிந்தால் பொலிஸாருக்கு தகவல் வழங்குமாறும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நியூ சவுத் வேல்ஸில் கண்டெய்னர் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட அழுகிய நிலையில் இரு சடலங்களின் அடையாளத்தை இதுவரை வெளியிட முடியவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
தடயவியல் குழுக்கள் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டதுடன், உடல்கள் மிகவும் சிதைந்துள்ளதால் அடையாளம் காண்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
நியூ சவுத் வேல்ஸ் பொலிசார் மரண விசாரணை அதிகாரிக்கு அறிக்கை தயாரிக்க உள்ளனர், அவர் தனது விசாரணையை மேற்கொண்டு வருகிறார்.
கன்டெய்னரில் கண்டெடுக்கப்பட்ட சடலங்களை இதுவரை காவல்துறையால் அதிகாரப்பூர்வமாக அடையாளம் காண முடியவில்லை.
இந்த இரண்டு சடலங்களும் சட்டவிரோதமாக குடியேறியவர்களின் சடலங்களாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்ற போதிலும், இது தொடர்பில் குறிப்பிட்ட சாட்சிகள் எவரையும் பொலிஸார் இதுவரை கண்டுபிடிக்கவில்லை என தெரிவிக்கப்படுகிறது.