வடகிழக்கு பிரேசிலின் கடற்பகுதியில் ஒரு படகில் சுமார் 20 சிதைந்த உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பாராவின் வடகிழக்கு கடற்கரையில் ஏப்ரல் 13 அன்று படகு கண்டுபிடிக்கப்பட்டதாக பிரேசிலிய மத்திய அரசு அமைச்சகம் அறிவித்தது.
அதன் பின்னர், சம்பவம் தொடர்பாக இரண்டு விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
படகில் குறைந்தது 20 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர், ஆனால் சிதைந்த உடல்கள் காரணமாக படகில் எத்தனை பேர் இறந்தனர் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இறந்தவர்கள் பிரேசிலியர்கள் அல்ல என்றும் கரீபியன் தீவுகளில் இருந்து வந்தவர்களாக இருக்கலாம் என்றும் விசாரணை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பிரேசிலியர்கள் காணாமல் போனதாக சமீபத்திய தகவல்கள் எதுவும் இல்லை என்று உள்ளூர் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
இறந்தவர்கள் யார், எந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் என்ற விவரம் இதுவரை வெளியாகவில்லை என்பதுடன் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.