17வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 32-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.
இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் தொடக்க வீரர்களாக சஹா, சுப்மன் கில் (தலைவர்) களமிறங்கினர். கில் 8 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். சஹா 2 ஓட்டங்களில் ஆட்டமிழக்க அடுத்துவந்த சாய் சுதர்சன் 12 ஓட்டங்களுடனும், டேவிட் மில்லர் 2 ஓட்டங்களுடனும், அபினவ் மனோகர் 8 ஓட்டங்களுடனும், ஷாருக் கான் ஓட்டம் எதுவும் எடுக்காமலும் (0) ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.
குஜராத் டைட்டன்ஸ் அணி 8.4 ஓவரில் 48 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. ராகுல் திவேதியா 10 ஓட்டங்களுடனும், மோகித் சர்மா 2 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். சற்று நிலைத்து நின்று ஆடிய ரஷித் கான் அதிகபட்சமாக 23 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க இறுதியில் 17.3 ஓவரில் குஜராத் டைட்டன்ஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ஓட்டங்களுக்கு சுருண்டது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஒரு அணி அடித்த குறைந்தபட்ச ஓட்டங்கள் இதுவாகும்.
சிறப்பாக பந்து வீசிய டெல்லி அணியின் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும், ஸ்டப்ஸ் 2 விக்கெட்டுகளையும், கலீல் அகமது, அக்சர் பட்டேல் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
90 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8.5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 92 ஓட்டங்களை எடுத்தது. இதையடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
நன்றி தமிழன்