Sports6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது டெல்லி அணி - IPL...

6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தியது டெல்லி அணி – IPL 2024

-

17வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் அகமதாபாத்தில் நடைபெற்ற 32-வது லீக் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் – டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து, குஜராத் டைட்டன்ஸ் தொடக்க வீரர்களாக சஹா, சுப்மன் கில் (தலைவர்) களமிறங்கினர். கில் 8 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். சஹா 2 ஓட்டங்களில் ஆட்டமிழக்க அடுத்துவந்த சாய் சுதர்சன் 12 ஓட்டங்களுடனும், டேவிட் மில்லர் 2 ஓட்டங்களுடனும், அபினவ் மனோகர் 8 ஓட்டங்களுடனும், ஷாருக் கான் ஓட்டம் எதுவும் எடுக்காமலும் (0) ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

குஜராத் டைட்டன்ஸ் அணி 8.4 ஓவரில் 48 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. ராகுல் திவேதியா 10 ஓட்டங்களுடனும், மோகித் சர்மா 2 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழந்தனர். சற்று நிலைத்து நின்று ஆடிய ரஷித் கான் அதிகபட்சமாக 23 பந்துகளில் 31 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க இறுதியில் 17.3 ஓவரில் குஜராத் டைட்டன்ஸ் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 89 ஓட்டங்களுக்கு சுருண்டது. நடப்பு ஐ.பி.எல். தொடரில் ஒரு அணி அடித்த குறைந்தபட்ச ஓட்டங்கள் இதுவாகும்.

சிறப்பாக பந்து வீசிய டெல்லி அணியின் முகேஷ் குமார் 3 விக்கெட்டுகளையும், இஷாந்த் சர்மா 2 விக்கெட்டுகளையும், ஸ்டப்ஸ் 2 விக்கெட்டுகளையும், கலீல் அகமது, அக்சர் பட்டேல் தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.

90 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 8.5 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 92 ஓட்டங்களை எடுத்தது. இதையடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

நன்றி தமிழன்

Latest news

வெப்பமான காலநிலை காரணமாக பல ஆசிய நாடுகளில் சுகாதார எச்சரிக்கைகள்

வெப்பமான காலநிலை காரணமாக, பிலிப்பைன்ஸ் உட்பட பல தென்கிழக்கு ஆசிய நாடுகளில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளதுடன் சுகாதார எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மின்சார அமைப்பில் கூடுதல் அழுத்தம் ஏற்படும் என...

நியூ சவுத் வேல்ஸில் தங்கையை கத்தியால் குத்திய சகோதரி

10 வயது சிறுமி கத்தியால் குத்தி கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் உயிரிழந்த சிறுமியின் சகோதரி நேற்று பிற்பகல் கைது செய்யப்பட்டதாக தெரியவந்துள்ளது. இதன்படி, 17 வயதுடைய சந்தேகநபர்...

$1.3 பில்லியன் லாட்டரியை வென்றார் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு குடியேறியவர் அமெரிக்காவில் $1.3 பில்லியன் பவர்பால் லாட்டரியை வென்றுள்ளார். லாவோஸில் இருந்து குடியேறியவர், எட்டு ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வருகிறார், கடந்த வாரம்...

ஆஸ்திரேலியாவில் ஜூன் 2 முதல் தொடங்கும் புதிய விசா திட்டம்

ஆஸ்திரேலியாவின் புதிய Pacific Engagement Visa பதிவு ஜூன் 2 முதல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, பசிபிக் தீவுகள் மற்றும் திமோர் லெஸ்டே ஆகிய நாடுகளைச் சேர்ந்த...

$1.3 பில்லியன் லாட்டரியை வென்றார் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நபர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு குடியேறியவர் அமெரிக்காவில் $1.3 பில்லியன் பவர்பால் லாட்டரியை வென்றுள்ளார். லாவோஸில் இருந்து குடியேறியவர், எட்டு ஆண்டுகளாக புற்றுநோயுடன் போராடி வருகிறார், கடந்த வாரம்...

மெல்போர்னில் உள்ள பிரபல உணவகம் அருகே கத்திக்குத்து

மெல்போர்னில் உள்ள மெக்டொனால்ட்ஸ் உணவகம் அருகே ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த கத்திக்குத்து காரணமாக குறித்த நபருக்கு உயிருக்கு ஆபத்தான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார்...