Sports3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி - IPL 2024

3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி – IPL 2024

-

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற 2-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் – குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற பஞ்சாப் அணி துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

அதன்படி பஞ்சாப் அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்களான சாம் கரண் – பிரப்சிம்ரன் சிங் ஒரளவு நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இருவரும் ஆட்டமிழந்த பின் அணியின் நிலைமை தலைகீழானது. குஜராத் அணியின் சுழற்பந்து வீச்சில் சிக்கி பஞ்சாப் வீரர்கள் விக்கெட்டுகளை தாரை வார்த்தனர். அதிலும் குறிப்பாக குஜராத அணி வீரர் சாய் கிஷோர் சிறப்பாக பந்து வீசி விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

கடைசி கட்டத்தில் ஹர்பிரீத் பிரார் மற்றும் ஹர்பிரித் பாட்டியா ஆகியோர் அதிரடியாக விளையாடிம் அணியை சிறந்த கட்டத்திற்கு எடுத்துச் செல்ல உதவினார். இதில் பிரார் 12 பந்துகளில் 29 ஓட்டங்களை எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இறுதியில் பஞ்சாப் 20 ஓவர்களில் 142 ஓட்டங்களை எடுத்து சகல விக்கெட்டுகளையும் இழந்தது. கடைசி பந்தில் பாட்டியா ஆட்டமிழந்தார். அந்த அணியில் அதிகபட்சமாக பிரப்சிம்ரன் சிங் 35 ஓட்டங்களை அடித்தார். குஜராத் தரப்பில் அதிகபட்சமாக சாய் கிஷோர் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.

பின்னர் 143 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் அணியின் சார்பில் விருதிமான் சகா மற்றும் சுப்மன் கில் ஆகியோர் முதலாவதாக களமிறங்கினர். இந்த ஜோடியில் சகா 13 ஓட்டங்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து நிதானமாக ஆடிய சுப்மன் கில் 35 ஓட்டங்களும், அடுத்து களமிறங்கிய டேவிட் மில்லர் 4 ஓட்டங்களும், ஓரளவு தாக்குப்பிடித்து ஆடிய சாய் சுதர்ஷன் 31 ஓட்டங்களும், ஓமர்சாய் 13 ஓட்டங்களும், ஷாரூக்கான் 8 ஓட்டங்களும், ரஷித் கான் 3 ஓட்டங்களும் எடுத்து சீரான இடைவெளியில் ஆட்டமிழந்து வெளியேறினர்.

முடிவில் தேவாட்டியா 36 (18) ஓட்டங்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தார். இறுதியில் குஜராத் அணி 19.1 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 146 ஓட்டங்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஹர்ஷல் பட்டேல் 3 விக்கெட்டுகளும், லிவிங்ஸ்டன் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினார்.

இதன்மூலம் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் அணி வெற்றிபெற்றது.

நன்றி தமிழன்

Latest news

மன்னர் சார்லஸை சந்தித்த தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர்

தெற்கு ஆஸ்திரேலிய பிரதமர் Peter Malinauskas, லண்டனில் உள்ள கிளாரன்ஸ் ஹவுஸில் மன்னர் சார்லஸை சந்தித்து, மாநிலத்திற்கு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து கலந்துறையாடியுள்ளார். Malinauskas-இன் ஏழு...

Aldi-இல் இருந்து புதிய சூரிய ஆற்றல் சேவை

Aldi பல்பொருள் அங்காடி சங்கிலி விக்டோரியாவில் உள்ள மக்களுக்கு சூரிய சக்தி மற்றும் பேட்டரி தொகுப்புகளை வழங்கத் தொடங்கியுள்ளது. அதன்படி, 10kWh பேட்டரி, 6.6kW சோலார் சிஸ்டம்...

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் அரசியல் ஆர்வலர்

பிரபல அமெரிக்க வர்ணனையாளரும் கன்சர்வேடிவ் கட்சி ஆர்வலருமான Charlie Kirk, சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் உட்டாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த வெளிப்புற...

ANU துணைவேந்தர் ராஜினாமா செய்தார்

பல மாத சர்ச்சைகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை Genevieve Bell ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் 13வது துணைவேந்தராக Genevieve Bell...

அமெரிக்காவில் சுட்டுக் கொல்லப்பட்ட இளம் அரசியல் ஆர்வலர்

பிரபல அமெரிக்க வர்ணனையாளரும் கன்சர்வேடிவ் கட்சி ஆர்வலருமான Charlie Kirk, சில மணி நேரங்களுக்கு முன்பு அமெரிக்காவின் உட்டாவில் உள்ள ஒரு பல்கலைக்கழகத்தில் நடந்த வெளிப்புற...

ANU துணைவேந்தர் ராஜினாமா செய்தார்

பல மாத சர்ச்சைகளுக்குப் பிறகு ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பதவியை Genevieve Bell ராஜினாமா செய்துள்ளார். ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் 13வது துணைவேந்தராக Genevieve Bell...