Newsவேகமாக வெப்பமடையும் ஐரோப்பா கண்டம்

வேகமாக வெப்பமடையும் ஐரோப்பா கண்டம்

-

உலகில் ஐரோப்பா மிக வேகமாக வெப்பமடையும் கண்டமாக மாறிவருவதாக ஐ.நா.வின் உலக வானிலை மையம் (WMO) மற்றும் ஐரோப்பிய யூனியனில் காலநிலை முகமை இணைந்து வெளியிட்ட கூட்டறிக்கை தெரிவிக்கின்றது.

ஐரோப்பிய கண்டத்தின் வெப்பம் சர்வதேச சராசரியைவிட இரண்டு மடங்கு வேகமாக அதிகரித்துவருவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறிகின்றனர். இது மனிதர்களின் உடல்நலன், பனிப்பாறை உருகுதல், பொருளாதார நடவடிக்கைகளின் கடும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்றும் அந்த அறிக்கை எச்சரிக்கின்றது.

இதனால் ஐரோப்பிய கண்டத்திலுள்ள நாடுகள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை நோக்கிய நகர்வை துரிதப்படுத்தினால் இந்த அபாயத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம் என்றும் ஆலோசனை வழங்கபட்டுள்ளது. ஐரோப்பிய கண்டம் கடந்த ஆண்டு தனது தேவையில் 43 சதவீத மின்சாரத்தை புதுப்பிக்கித்தக்க எரிசக்தி மூலம் உருவாக்கியுள்ளது. இது அதற்கு முந்தைய ஆண்டில் 36 சதவீதமாக இருந்த தகவலும் அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

2015ஆம் ஆண்டு பரிஸில் காலநிலை தொடர்பாக 195 நாடுகள் இணைந்து ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டன. புவியின் வெப்பநிலையை 2 டிகிரி செல்சியஸுக்கு குறைவாக வைத்திருக்க வேண்டும் என்று உறுதி ஏற்றன. ஆனால், கடந்த ஐந்து ஆண்டுகள் புள்ளிவிவரங்களை ஒப்பிட்டால் ஐரோப்பிய கண்டத்தில் தொழிற்புரட்சிக்கு முந்தைய அளவைக் காட்டிலும் உயர்ந்து வெப்பநிலை 2.3 டிகிரி செல்சியாக அதிகரித்துள்ளது.

இதனால். ஐரோப்பாவில் வெப்ப அழுத்தம், காட்டுத் தீ, வெப்ப அலைகள், பனிப்பாறைகள் உருகுதல், பனியளவு குறைவு, பனிப்பொழிவு இல்லாமை போன்ற காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள் நீண்டு கொண்டே செல்வதாக ஐரோப்பிய யூனியன் செயலாக்கக் குழு துணை தலைவர் கோபர்னிகஸ் கூறுகிறார்.

டபிள்யுஎம்ஓ (WMO) அறிக்கையானது இந்த ஆண்டு ஓர் எச்சரிக்கைக் குறிப்புடன் வந்துள்ளது. புவி வெப்பமயமாதலைத் தடுக்க இந்த உலக நாடுகள் போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை. இது இன்னும் மோசமான விளைவுகளை எதிர்கொள்ள நேரும் என்று அக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. உலகளவில் மார்ச் 2024, தொடர்ச்சியாக 10ஆவது அதீத வெப்பநிலை கொண்ட மாதமாக பதிவாகியுள்ளது. ஐரோப்பிய கண்டத்தின் சமுத்திரங்களின் கடல் மேற்பரப்பின் சராசரி வெப்ப அளவு 2023இல் மிக அதிகமாக புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

அதீத வெப்பத்தால் ஐரோப்பிய கண்டத்தில் மனித உயிரிழப்புகள் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு புயல், வெள்ளம், காட்டுத்தீக்கு 150 பேர் உயிரிழந்தனர். 2023இல் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார இழப்புகள் 13.4 பில்லியன் யூரோக்களை எட்டியது. இயல்புக்கு மாறான காலநிலைகளால் வெப்ப அலைகள், காட்டுத் தீ, வறட்சி, வெள்ளம் ஆகியன ஐரோப்பிய நாடுகளில் ஏற்பட்டுள்ளது. ஆல்ஃப்ஸ் மலையில் கடந்த இரண்டாண்டுகளில் 10 சதவீத பனிப் பாறைக்ள் உருகியுள்ளன. இவ்வாறாக அந்த ஆய்வறிக்கையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

Latest news

ஆஸ்திரேலியாவில் மலிவு விலையில் வீடுகள் காணப்படும் பகுதிகள்

வாழ்க்கைச் செலவைக் கருத்தில் கொண்டு புதிய வீடு வாங்குபவர்களுக்கு ஆஸ்திரேலியாவின் மிகக் குறைந்த விலையில் உள்ள புறநகர்ப் பகுதிகளை ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. சிட்னி, பிரிஸ்பேன்,...

ஆஸ்திரேலியாவில் மீண்டும் உயர்ம் பியர் விலை

அவுஸ்திரேலியாவில் பியர் மீதான வரி அடுத்த வாரம் மீண்டும் அதிகரிக்கப்படுவதால் பியர் விலை உயரும் என ஊகங்கள் வெளியாகியுள்ளன. இந்த வரி அதிகரிப்பு நிதிப் பிரச்சினைகளை எதிர்நோக்கும்...

உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையின் கறுப்புச் சந்தையாக உள்ள ரஷ்யா!

ரஷ்யாவுக்கும் உக்ரைனுக்கும் கடந்த 2022ஆம் ஆண்டு பெப்ரவரியிலிருந்து இன்று வரையில் போர் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில், ரஷிய படைகளால் சிறைபிடிக்கப்பட்ட உக்ரைன் போர்க் கைதிகளின் உடல்கள்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

இறந்த காதலனை திருமணம் செய்த காதலி !

தாய்வான் நெடுஞ்சாலையில் கடந்த 15 ஆம் திகதி ஒரு பெண்ணும் அவரது காதலரும் சென்றுக் கொண்டிருந்த வேளையில், அடுத்தடுத்தடுத்து 4 கார்கள் மோதியதில் பெண்ணின் காதலன்...

ஒலிம்பிக் சரித்திரம் படைத்த ஆஸ்திரேலியாவின் ரக்பி அணி

இந்த வருட ஒலிம்பிக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி ஏழு பேர் கொண்ட ரக்பி போட்டியின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இன்று காலை பாரிஸில் நடைபெற்ற ஆட்டத்தில்...