மலேசியாவில் இரண்டு கடற்படை ஹெலிகாப்டர்கள் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இன்று காலை லுமுட்டில் ரோயல் மலேசியன் நேவியின் பயிற்சியின் போது இரண்டு ஹெலிகாப்டர்கள் வானில் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்தில் யாரும் உயிர் பிழைக்கவில்லை என்றும் ஹெலிகாப்டரில் இருந்தவர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
சடலங்கள் அடையாளம் காண லுமுட்டில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக மலேசிய கடற்படை தெரிவித்துள்ளது.
சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்த குழுவொன்று நியமிக்கப்படும் எனவும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.
ஒரு ஹெலிகாப்டரில் 7 பேரும், மற்றொரு ஹெலிகாப்டரில் 3 பேரும் பயணம் செய்தனர்.
கடந்த மார்ச் மாதம் மலேசிய கடலோர காவல்படையின் ஹெலிகாப்டர் பயிற்சி விமானத்தின் போது ஆங்சா தீவில் கடலில் விழுந்து விபத்துக்குள்ளானது.
விமானி, துணை விமானி மற்றும் இரண்டு பயணிகள் மீனவர்களால் மீட்கப்பட்டனர்.