Sports7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தியது ராஜஸ்தான் - IPL 2024

7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் லக்னோவை வீழ்த்தியது ராஜஸ்தான் – IPL 2024

-

ஐ.பி.எல் தொடரின் நேற்றைய 2-வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கெதிராக ராஜஸ்தான் ரோயல்ஸ் நாணயசுழற்சியில் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி லக்னோ அணியின் டி கோக், கேஎல் ராகுல் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். முதல் ஓவரை டிரென்ட் போல்ட் வீசினார். முதல் இரண்டு பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார் டி கோக். ஆனால் அடுத்த பந்தில் ஆட்டமிழக்க அடுத்த ஓவரில் மார்கஸ் ஸ்டோய்னிஸ் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன்மூலம் 2 ஓவரில் 11 ஓட்டங்கள் எடுப்பதற்குள் இரண்டு முக்கிய விக்கெட்டுகளை லக்னோ அணி இழந்தது.

அதன்பின் கேஎல் ராகுல் உடன் தீபக் ஹூடா ஜோடி சேர்ந்தார். இந்த ஜோடி அணியை சரிவில் இருந்து மீட்டது. மேலும், அணியின் ரன்ரேட்டை 10-க்கு கொண்டு வந்தது. பவர்பிளேயில் 46 ஓட்டங்களை அடித்திருந்தது. 10 ஓவரில் 94 ஓட்டங்கள் சேர்த்திருந்தது.

கேஎல் ராகுல் 31 பந்தில் அரைசதம் அடித்தார். மறுமுனையில் தீபக் ஹூடா 30 பந்தில் அரைசதம் அடித்தார்.அரைசதம் அடித்த அடுத்த பந்தில் தீப் ஹூடா ஆட்டமிழந்தார். அடுத்து அதிரடி வீரர் நிக்கோலஸ் பூரன் களம் இறங்கினார். லக்னோ அணி 15 ஓவரில் 150 ஓட்டங்களை தொட்டது.

16-வது ஓவரின் முதல் பந்தில் பூரன் ஆட்டமிழந்தார். அவர் 11 பந்தில் 11 ஓட்டங்கள் எடுத்து ஏமாற்றம் அளித்தார். 5-வது விக்கெட்டுக்கு கேஎல் ராகுல் உடன் ஆயுஷ் படோனி ஜோடி சேர்ந்தார்.

18-வது ஓவரில் கே.எல். ராகுல் 76 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். 48 பந்தில் 8 பவுண்டரி, 2 சிக்ஸ் உடன் அவர் 76 ஓட்டங்கள் அடித்தார்.

கடைசி மூன்று ஓவரில் குறைவான ஓட்டங்களே கிடைக்க லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட் இழப்பிற்கு 196 ஓட்டங்களைப் பெற்றது.

இதன்படி 197 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய ராஜஸ்தான் அணி 19 ஓவர்கள் நிறைவில் 3 மாத்திரம் இழந்து 199 ஓட்டங்களைப் பெற்று வெற்றிப் பெற்றது.

Latest news

ஆஸ்திரேலியர்களுக்கு 3 மணி நேரம் இலவச மின்சாரம்

புதிய எரிசக்தி திட்டத்தின் கீழ் ஆஸ்திரேலியர்களுக்கு ஒரு நாளைக்கு மூன்று மணிநேரம் இலவச சூரிய சக்தி மின்சாரம் வழங்கப்படும் என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. “Solar Sharer” என்று...

ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளை எச்சரிக்கும் “கல்மேகி”

தென்கிழக்கு ஆசியாவில் வீசும் "Kalmaegi" என்ற வெப்பமண்டல சூறாவளி குறித்து ஆஸ்திரேலிய வெளியுறவுத் துறை ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தப் புயல் வியட்நாம், கம்போடியா...

நவம்பர் மாத வட்டி விகிதத்தை அறிவிக்கும் RBA

நவம்பர் மாதத்தில் வட்டி விகிதத்தை 3.6% ஆக மாற்றாமல் வைத்திருப்பதாக RBA அறிவித்துள்ளது. இது பல ஆய்வாளர்கள் எதிர்பார்த்த ஒரு முடிவாகும். மேலும் வட்டி விகிதத்தை மாற்றாததற்கு...

$250 அபராதம் வசூலிக்கும் தவறான போக்குவரத்து சட்டங்களால் ஏமாறாதீர்கள்!

போலி போக்குவரத்து விதிகள் ஆன்லைனில் பரப்பப்படுவது குறித்து ஆஸ்திரேலிய ஓட்டுநர்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 1 முதல், அனைத்து ஓட்டுநர்களும் தங்கள் வாகனங்களின் முகப்பு விளக்குகளை...

ஆஸ்திரேலியாவில் செப்டம்பர் மாதத்தில் அதிகரித்துள்ள வீட்டு செலவுகள்

செப்டம்பர் மாதத்தில் ஆஸ்திரேலியாவில் வீட்டுச் செலவினங்களில் சிறிது அதிகரிப்பு ஏற்பட்டது. ஆஸ்திரேலிய புள்ளிவிவர பணியகம் (ABS) இன்று வெளியிட்ட பருவகாலமாக சரிசெய்யப்பட்ட புள்ளிவிவரங்கள், செப்டம்பரில் வீட்டுச் செலவு...

ஆஸ்திரேலியாவின் எரிவாயு ஏற்றுமதி பற்றி வெளியான அறிக்கை

கடந்த ஐந்து ஆண்டுகளில் ஆஸ்திரேலியா ஏற்றுமதி செய்துள்ள எரிவாயுவின் அளவு 22 ஆண்டுகளுக்கான உள்நாட்டுத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் போதுமானது என்று ஒரு புதிய அறிக்கை...