Sportsபோராடித் தோற்றது மும்பை - IPL 2024

போராடித் தோற்றது மும்பை – IPL 2024

-

17 வது ஐ.பி.எல். தொடரில் நேற்று 2 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. அதன்படி முதலாவது போட்டியில் டெல்லி – மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற மும்பை அணியின் தலைவர் பாண்ட்யா பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதையடுத்து, முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய டெல்லி அணிக்கு தொடக்க வீரர்களாக ஜேக் பிரேசர் மெக்கர்க் – அபிஷேக் போரல் ஆகியோர் களமிறங்கினர்.

இதில் தொடக்கம் முதல் ஜேக் பிரேசர் அதிரடியாக விளையாடி ஓட்டங்களைக் குவித்தார். மும்பை அணியின் பந்துவீச்சை பவுண்டரி , சிக்சருக்கு பறக்க விட்டார் வெறும் 15 பந்துகளில் அவர் அரைசதம் விளாசி அசத்தினார். அரைசதம் கடந்த பிறகும் அதிரடியை விடாமல் மும்பை அணியின் பந்துவீச்சை ஜேக் பிரேசர் துவம்சம் செய்தார்.

தொடர்ந்து ஆடிய அவர் 27 பந்துகளில் 84 ஓட்டங்கள் (11 பவுண்டரி, 6 சிக்சர்) எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் நிலைத்து ஆடிய அபிஷேக் போரல் 36 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். தொடர்ந்து வந்த ஷாய் ஹோப் சிறப்பாக ஆடி 17 பந்துகளில் 41 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

பின்னர் ரிஷப் பண்ட் , டிரிஸ்டன் ஸ்டப்ஸ் இருவரும் இணைந்து அதிரடி காட்டினர். இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட் இழப்பிற்கு 257 ஓட்டங்கள் குவித்தது. ஸ்டப்ஸ் 48 ஓட்டங்களும் , பண்ட் 29 ஓட்டங்களும், எடுத்தனர்.

தொடர்ந்து 258 ஓட்டங்கள் என்ற இமாலய இலக்குடன் மும்பை அணி களமிறங்கியது.

அதன்படி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 247 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுத் தோல்வியுற்றது.

Latest news

விக்டோரியாவில் நாளை BBQ இற்கு தடை

Boxing day தினத்தன்று விக்டோரியாவில் வெப்பம் மற்றும் காற்றுடன் கூடிய காலநிலை காரணமாக தீ முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. விக்டோரியாவின் CFA Boxing day தினத்திற்கு மாநிலம்...

கிறிஸ்மஸ் பரிசுகளை விற்று பணம் சம்பாதிக்கும் ஆஸ்திரேலியர்கள்

இந்த பண்டிகைக் காலத்தில் ஆஸ்திரேலியர்கள் தங்கள் தேவையற்ற பரிசுகளை விற்று கிட்டத்தட்ட ஒரு பில்லியன் டாலர்கள் சம்பாதிக்கலாம் என்று புதிய ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது. 52 சதவீத ஆஸ்திரேலியர்கள்...

அடுத்த இரண்டு மணிநேரம் கவனமாக இருக்குமாறு விக்டோரியர்களுக்கு எச்சரிக்கை

விக்டோரியாவின் தேசிய பூங்காவில் காட்டுத் தீ தொடர்ந்து பரவி வருவதால் கிறிஸ்துமஸ் தினத்தன்று விக்டோரியா மக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மெல்போர்னின் வடமேற்கில் உள்ள கிராம்பியன்ஸ் அருகே...

அரச குடும்பத்தில் இருந்து நீக்கப்பட்ட Cadbury

பிரிட்டிஷ் அரச குடும்பத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பிராண்டுகளில் இருந்து Cadbury நீக்கப்பட்டுள்ளது. 170 ஆண்டுகளுக்குப் பிறகு என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது வாழ்நாள் முழுவதும் Cadbury...

அரச குடும்பத்தில் இருந்து நீக்கப்பட்ட Cadbury

பிரிட்டிஷ் அரச குடும்பத்தால் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரப்பூர்வ பிராண்டுகளில் இருந்து Cadbury நீக்கப்பட்டுள்ளது. 170 ஆண்டுகளுக்குப் பிறகு என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாம் எலிசபெத் மகாராணி தனது வாழ்நாள் முழுவதும் Cadbury...

பயணிகள் உட்பட 67 பேருடன் விபத்துக்குள்ளான விமானம்

67 பேருடன் பயணித்த அஜர்பைஜான் நாட்டுக்கு சொந்தமான பயணிகள் விமானம் கஜகஸ்தானில் விபத்துக்குள்ளானதாக பிபிசி செய்தி சேவை தெரிவித்துள்ளது. கஜகஸ்தானின் அக்டா நகருக்கு அருகில் இந்த விமானம்...