போன்சா ஏர்லைன்ஸின் பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் சிரமத்திற்கு உள்ளான பயணிகளுக்கு இலவச விமான சேவையை வழங்க விர்ஜின் ஏர்லைன்ஸ் நடவடிக்கை எடுத்துள்ளது.
பட்ஜெட் விமான நிறுவனமான போன்சாவின் நடவடிக்கைகளால் சிக்கித் தவிக்கும் பயணிகளுக்கு உதவுமாறு விர்ஜின் ஆஸ்திரேலியா மற்றும் குவாண்டாஸ் ஆகிய இரு நிறுவனங்களையும் அரசாங்கம் கேட்டுள்ளது.
தலைமை நிர்வாக அதிகாரி டிம் ஜோர்டன் கூறுகையில், போன்சா இன்று முதல் சேவைகளை தற்காலிகமாக நிறுத்திவிட்டதாகவும், தற்போது அடுத்த நடவடிக்கை குறித்து விவாதித்து வருவதாகவும் தெரிவித்தார்.
தனது முடிவால் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களிடம் மன்னிப்பு கேட்டுக் கொள்வதாகவும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விரைவில் முடிவெடுப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையில், போன்சா விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் சிரமத்திற்கு உள்ளான பயணிகளுக்கு உதவ குவாண்டாஸ் மற்றும் விர்ஜின் நிறுவனங்கள் தயாராக இருப்பதாக போக்குவரத்து அமைச்சர் கேத்தரின் கிங் தெரிவித்தார்.
போன்சா மெல்போர்ன் விமான நிலையத்தில் அனைத்து சேவைகளையும் நிறுத்தி வைத்துள்ளது மற்றும் பயணிகள் மாற்று வழிகளைக் கண்டறியுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.