Newsஇங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தைவிட அதிக மதிப்புடைய அரிய பொருள்

இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்ட தங்கத்தைவிட அதிக மதிப்புடைய அரிய பொருள்

-

இங்கிலாந்து தொல்பொருள் ஆய்வாளர்கள், ரோமானிய காலத்தைச் சேர்ந்த, தங்கத்தை விட அதிக மதிப்புள்ள ஊதா நிறப் பொருள் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளார்கள் .

இங்கிலாந்திலுள்ள Carlisle என்னுமிடத்தில் நடந்துவந்த ஆய்வில், ரோமானிய காலகட்டத்தைச் சேர்ந்த குளியல் அறையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வாராய்ச்சியின்போது அபூர்வ ஊதா நிறப் பொருள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது.

பிரித்தானிய நிலவியல் அமைப்புடன் இணைந்து பல்வேறு நிபுணர்கள் மேற்கொண்ட ஆய்வில், அந்தப் பொருள், டைரியன் ஊதா (Tyrian Purple) என கண்டறியப்பட்டது. இந்த டைரியன் ஊதா, ரோமானியப் பேரரசின் ஏகாதிபத்திய நீதிமன்றத்துடன் தொடர்புடைய நிறமாகும்.

இந்த நிறமியானது மத்திய தரைக்கடல், வட ஆப்பிரிக்கா மற்றும் மொராக்கோவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆயிரக்கணக்கான சிப்பிகளிலிருந்து தயாரிக்கப்படுகிறது, அதை தயாரிப்பது மிகவும் கடினம் என்பதால், அந்த காலகட்டத்தில் இந்த டைரியன் ஊதா, தங்கத்தை விட அதிக மதிப்புடையதாக இருந்துள்ளது.

இது ஒரு அபூர்வமான கண்டுபிடிப்பு என்று கூறியுள்ள ஆய்வாளர்கள், இந்த அரிய நிறமி, எகிப்தின் ரோமானிய மாகாணத்திலுள்ள சுவர் ஓவியங்களிலும், சில உயர் அந்தஸ்துகொண்டோரின் சவப்பெட்டிகளிலும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்கள்.

Latest news

Optus 000 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ள 10 குறைபாடுகள்

Optus Network மேம்படுத்தலின் போது ஏற்பட்ட Triple-0 செயலிழப்பு குறித்த அறிக்கையில் 10 குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இந்த மின்தடை 14 மணி நேரம் நீடித்ததாகவும், அவசர காலங்களில்...

நடைபாதையில் நடந்து சென்ற இளம் பெண்ணை கொலை செய்த ஓட்டுநர்

குயின்ஸ்லாந்தில் எட்டு பாதசாரிகள் கொண்ட குழுவில் காரை ஓட்டிச் சென்று 24 வயது நியூ சவுத் வேல்ஸ் பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர்...

100க்கும் மேற்பட்ட புத்தகக் கடை ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய புத்தக விற்பனையாளர்களின் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். சில்லறை மற்றும் துரித உணவு தொழிலாளர்கள்...

Green Card-ஐ நிறுத்தி வைக்க டிரம்ப் உத்தரவு

"Green Card" அல்லது அமெரிக்க விசா பெறுவதற்கான லாட்டரி செயல்முறை உடனடியாக நிறுத்தி வைக்கப்படும் என்று உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் Khristi Noem அறிவித்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட்...