Sports7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்திய மும்பை - IPL 2024

7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்திய மும்பை – IPL 2024

-

ஐ.பி.எல். தொடரில் இன்று நடைபெற்ற போட்டியில் மும்பை இந்தியன்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற மும்பை அணியின் தலைவர் ஹர்திக் பாண்ட்யா பந்து வீச்சை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கிய ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக அபிஷேக் சர்மா – டிராவிஸ் ஹெட் ஆகியோர் களமிறங்கினர். வழக்கமாக அதிரடியில் பட்டையை கிளப்பும் அபிஷேக் சர்மா இந்த முறை மும்பை பந்து வீச்சில் திணறினார். மறுமுனையில் டிராவிஸ் ஹெட் அதிரடியாக விளையாடினார்.

தொடக்கம் முதலே தடுமாறிய அபிஷேக் சர்மா 11 ரன்களிலும், மயங்க் அகர்வால் 5 ரன்களிலும், அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். வழக்கமாக அதிரடியில் வெளுத்து வாங்கும் ஐதராபாத் வீரர்கள் இந்த போட்டியில் மும்பை பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் திணறினர். பின்னர் களமிறங்கிய நிதிஷ் ரெட்டி 20 ரன்களிலும், கிளாசென் 2 ரன்களிலும் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தனர்.

மறுமுனையில் நிலைத்து விளையாடிய டிராவிஸ் ஹெட் அரை சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 48 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய சபாஸ் அகமது 10 ரன்களிலும், அப்துல் சமத் 3 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். கடைசி கட்டத்தில் கம்மின்ஸ் மட்டும் பொறுப்புடன் விளையாடி அணி கவுரமான நிலையை எட்ட உதவினார். அவர் 17 பந்துகளில் 35 ரன்கள் அடித்தார்.

இதன் மூலம் ஐதராபாத் 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 173 ஓட்டங்களை அடித்துள்ளது. அந்த அணியில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 48 ரன்கள் அடித்தார். மும்பை தரப்பில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்ட்யா, சாவ்லா தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினர்.

இதனையடுத்து 174 ஓட்டங்கள் அடித்தால் வெற்றி என்ற சவாலான இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாட களமிறங்கிய மும்பை அணி 17.2 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை இழந்து 174 ஓட்டங்களை எடுத்து வெற்றி பெற்றது.

Latest news

ஆஸ்திரேலிய மக்களை பைத்தியமாக்கும் Health Apps!

ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், உணவுமுறை மற்றும் உடற்பயிற்சி செயலிகளைப் (Health Apps) பயன்படுத்தும் இளைஞர்கள் எதிர்கொள்ளும் ஆபத்துகள் குறித்து தெரியவந்துள்ளது. இத்தகைய இளைஞர்கள் உணவுமுறை, உடற்பயிற்சி...

வெற்றி பெற்றது தெற்கு ஆஸ்திரேலிய பள்ளிகளில் மொபைல் போன் தடை

தெற்கு ஆஸ்திரேலிய மாநிலம் பொதுப் பள்ளிகளில் மொபைல் போன்களுக்கு தடை விதித்தது பல வெற்றிகரமான முடிவுகளைத் தந்துள்ளது. இதன் விளைவாக மாணவர்களின் ஒழுக்க விரோத நடவடிக்கைகள் கணிசமாகக்...

அதிகம் Gym செல்பவர்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக ஆஸ்திரேலியா

உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டின் மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது Gymகளில் உறுப்பினர் பெற்றவர்களின் சதவீதம் குறித்து புதிய அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை Runrepeat வெளியிட்டதாகக் கூறப்படுகிறது. ஆஸ்திரேலியா 9வது...

அமெரிக்க குடியுரிமை வாங்க ஒரு சிறப்பு வாய்ப்பு.

அமெரிக்க குடியுரிமையை 5 மில்லியன் டாலர்களுக்கு விற்க நடவடிக்கை எடுப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறுகிறார். இலவச அமெரிக்க குடியுரிமை வழங்குவதற்காக 'Green card' லாட்டரி...

ஆஸ்திரேலியாவில் நீரிழிவு நோயாளிகளை குறிவைத்து நடத்தப்பட்ட ஒரு மோசடி

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஆஸ்திரேலியர்களை குறிவைத்து பல மோசடி நடவடிக்கைகள் உள்ளன. அதன்படி, சமூக ஊடக வலையமைப்புகளில் வெளியிடப்படும் போலி விளம்பரங்கள் மூலம் நோயாளிகளிடம் பணம் மோசடி...