Newsபட்டப்பகலில் மருத்துவமனைக்குள் நடந்த கொடூரம் - பலர் படுகாயம்

பட்டப்பகலில் மருத்துவமனைக்குள் நடந்த கொடூரம் – பலர் படுகாயம்

-

சீனாவின் Zhenxiong மாவட்டத்தில் மருத்துவமனை ஒன்றில் நுழைந்து நபர் ஒருவரின் கொலைவெறித் தாக்குதல் சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டுள்ளதுடன் மருத்துவர்கள் உட்பட 23 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சீனாவின் Yunnan மாகாணத்தின் வடகிழக்கில் அமைந்துள்ள மருத்துவமனை ஒன்றிலேயே குறித்த சம்பவம் நடந்துள்ளது.

முதலில் 10 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர் அல்லது கொல்லப்பட்டிருக்கலாம் என்றே கூறப்பட்டது. ஆனால் அதன் பின்னர், இருவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் 23 பேர்கள் காயங்களுடன் தப்பியுள்ளதாகவும் உறுதி செய்யப்பட்டுள்ளது. பலரது நிலை கவலைக்கிடம் என்பதால், இறப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என்றே தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த தாக்குதல் சம்பவத்தில் நூலிழையில் தப்பிய ஒருவர் தெரிவிக்கையில், காயம்பட்டவர்களில் சிலர் மருத்துவர்கள் என்றே குறிப்பிட்டுள்ளார். இந்த நிலையில், தாக்குதல்தாரியை பொலிசார் கைது செய்துள்ளனர்.

வெளியான காணொளிகளில், தாக்குதலுக்கு இலக்கானவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும், பலர் பலத்த காயங்களுடன் சுருண்டுவிழுந்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Latest news

இந்தியாவுடன் வலுவான வர்த்தக ஒப்பந்தம் செய்வோம் என கூறிய அவுஸ்திரேலிய அமைச்சர்கள்

அமெரிக்காவின் ட்ரம்ப் நிர்வாகம் விதித்த வரிகள் குறித்து அவுஸ்திரேலிய வர்த்தக மற்றும் வெளிவிவகார அமைச்சர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குறிப்பாக வர்த்தக அமைச்சர் Don Farell, இந்தியாவுடன் வலுவான...

ஆஸ்திரேலிய தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் டிரம்ப் கொடுக்கும் அழுத்தம்

ஆஸ்திரேலியா உட்பட பல நாடுகள் மீது தொழில்நுட்ப வரிகள் மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாடுகளை விதிக்கப் போவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார். இது அமெரிக்க...

ஆஸ்திரேலியாவில் கட்டாயத் திருமணம் நிறுத்தப்பட வேண்டும்!

கட்டாயத் திருமணங்கள் குறித்த அறிக்கைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஆஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை மற்றும் சமூக அமைப்புகளின் அறிக்கைகள் இதை நிரூபிக்கின்றன. பள்ளிப் படிப்பை முடிப்பதற்கு முன்பே திருமணம்...

16 வயது சிறுவனின் மரணத்திற்கு காரணமான ChatGPT

16 வயது சிறுவனின் மரணத்திற்கு ChatGPT காரணமாக இருந்ததாகக் கூறி, OpenAI மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளது. அமெரிக்காவின் கலிபோர்னியாவில் OpenAI மற்றும் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி...

நாளை முதல் விக்டோரியா மற்றும் NSW-க்கு வரும் பதின்ம வயதினருக்கான Uber

ஆஸ்திரேலியா முழுவதும் இளைஞர்களுக்காக Uber ஒரு புதிய சேவையை அறிமுகப்படுத்தியுள்ளது. "Uber for Teens" என்று அழைக்கப்படும் இந்தப் போக்குவரத்து சேவை நாளை முதல் செயல்படும். இந்த சேவை...

தென் சீனக் கடலில் கடற்படைப் பயிற்சியில் பங்கேற்கும் ஆஸ்திரேலிய போர்க்கப்பல்

தென் சீனக் கடலில் நடைபெறும் கடற்படைப் பயிற்சியில் ஆஸ்திரேலிய போர்க்கப்பல் ஒன்று இணைந்துள்ளது. ஆஸ்திரேலியா, கனடா மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகியவை வான் அச்சுறுத்தல்களுக்கு எதிரான கூட்டுப் பயிற்சிகளுக்காக...