Sports10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அபார வெற்றி - IPL 2024

10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அபார வெற்றி – IPL 2024

-

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற லக்னோ அணியின் தலைவர் கே.எல். ராகுல் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ஓட்டங்களை எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக பதோனி 55 ஓட்டங்களை எடுத்தார். ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 166 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் – அபிஷேக் சர்மா களமிறங்கினர். இருவரும் லக்னோ பந்து வீச்சை எந்த வித சிரமமின்றி எதிர்கொண்டு அதிரடியில் வெளுத்து வாங்கினர்.

அதிரடியாக டிராவிஸ் ஹெட் 16 பந்துகளில் அரைசதம் அடித்தார். சிறிது நேரத்திலேயே அபிஷேக் சர்மா 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரின் விக்கெட்டையும் வீழ்த்த லக்னோ அணி எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

முடிவில் வெறும் 9.4 ஓவர்களிலேயே 167 ஓட்டங்களை அடித்து ஐதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89 ஓட்டங்களும், அபிஷேக் சர்மா 75 ஓட்டங்களும் எடுத்தனர்.

Latest news

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு வயதுக் கட்டுப்பாடுகள்

ஆஸ்திரேலியாவில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு வயதுக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதற்கு புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்துமாறு கோரிக்கைகள் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில், இணையத்தில் குழந்தைகளின்...

விக்டோரியாவின் சுகாதார அதிகாரிகளுக்கு ஏற்பட்டுள்ள சவால் நிலை

விக்டோரியா மாகாணத்தில் பாடசாலை மாணவர்களிடையே இலத்திரனியல் சிகரெட்டுகள் வேகமாக பரவி வருவதைக் கட்டுப்படுத்த பாடசாலை மட்டத்தில் புதிய வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எலக்ட்ரானிக் சிகரெட்டைப் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள்...

வாழ்க்கைச் செலவு நெருக்கடி காரணமாக ஆபத்தில் உள்ள சுகாதாரம்

மில்லியன் கணக்கான ஆஸ்திரேலியர்கள் தங்கள் உடல்நலப் பாதுகாப்பைத் தவிர்க்கிறார்கள், புதிய ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. Finder இன் ஆய்வின்படி, கடந்த 12 மாதங்களில் ஐந்து ஆஸ்திரேலியர்களில் இருவர் மருத்துவ...

வெளி நாட்டில் தொலைந்து போன ஆஸ்திரேலியர்களை அழைத்து வர அரசு திட்டம்

நியூ கலிடோனியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலை காரணமாக சிக்கித் தவிக்கும் அவுஸ்திரேலியர்களை அவர்களது சொந்த நாட்டுக்கு அழைத்து வருவதற்கு அரசாங்கம் விசேட வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது. சுமார் ஒரு...