Sportsராஜஸ்தானை 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி - IPL 2024

ராஜஸ்தானை 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டெல்லி – IPL 2024

-

ஐ.பி.எல். போட்டியில் நேற்று டெல்லியில் நடைபெற்ற 56-வது லீக் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ்- சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் ரோயல்ஸ் அணிகள் மோதின. இதில் நாணயசுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட்டுகளை இழந்து 221 ஓட்டங்களை எடுத்தது. அதிகபட்சமாக போரல் 65 ஓட்டங்களை எடுத்தார். ராஜஸ்தான் தரப்பில் அஸ்வின் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதனையடுத்து ராஜஸ்தான் அணியின் தொடக்க வீரர்களாக ஜெய்ஸ்வால் – பட்லர் களமிறங்கினர். ஜெய்ஸ்வால் முதல் பந்தை பவுண்டரி விளாச 2 பந்தில் பிடி கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த சாம்சன் தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடினார்.

மெதுவாக விளையாடிய பட்லர் 17 பந்தில் 19 ஓட்டங்கள் எடுத்து வெளியேறினார். அடுத்து வந்த ரியான் பராக் சாம்சனுடன் ஜோடி சேர்ந்து சிறப்பாக ஆடினர். தொடர்ந்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்திய சாம்சன் அரைசதம் விளாசினார். தடுமாற்றத்துடன் விளையாடிய பராக் 22 பந்தில் 27 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார்.

அதனை தொடர்ந்து தனி ஆளாக போராடிய சாம்சன் 86 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த ஆட்டமிழப்பு சர்ச்சையை ஏற்படுத்தும் விதமாக இருந்தது. அதற்கு சாம்சன் ரீவ்யூ கேட்டார். ஆனால் 3-வது நடுவர் அதனை ஆட்டமிழப்பு கொடுத்ததால் ரீவ்யூ எடுக்க முடியாது என கூறினர்.

இதனை தொடர்ந்து அதிரடி காட்டிய சுபம் துபே 12 பந்தில் 25 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி வரை போராடிய பவல் 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

இறுதியில் ராஜஸ்தான் 20 ஓவரில் 8 விக்கெட்டுகளை இழந்து 201 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. இதனால் டெல்லி அணி 20 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் கலீல் அகமது, குல்தீப் யாதவ், முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

Latest news

Optus 000 இல் வெளிப்படுத்தப்பட்டுள்ள 10 குறைபாடுகள்

Optus Network மேம்படுத்தலின் போது ஏற்பட்ட Triple-0 செயலிழப்பு குறித்த அறிக்கையில் 10 குறைபாடுகள் கண்டறியப்பட்டன. இந்த மின்தடை 14 மணி நேரம் நீடித்ததாகவும், அவசர காலங்களில்...

நடைபாதையில் நடந்து சென்ற இளம் பெண்ணை கொலை செய்த ஓட்டுநர்

குயின்ஸ்லாந்தில் எட்டு பாதசாரிகள் கொண்ட குழுவில் காரை ஓட்டிச் சென்று 24 வயது நியூ சவுத் வேல்ஸ் பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட ஒருவர்...

100க்கும் மேற்பட்ட புத்தகக் கடை ஊழியர்கள் இன்று வேலை நிறுத்தம்

ஆஸ்திரேலியாவின் இரண்டு பெரிய புத்தக விற்பனையாளர்களின் 100க்கும் மேற்பட்ட ஊழியர்கள், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர். சில்லறை மற்றும் துரித உணவு தொழிலாளர்கள்...

Green Card-ஐ நிறுத்தி வைக்க டிரம்ப் உத்தரவு

"Green Card" அல்லது அமெரிக்க விசா பெறுவதற்கான லாட்டரி செயல்முறை உடனடியாக நிறுத்தி வைக்கப்படும் என்று உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் Khristi Noem அறிவித்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட்...

Green Card-ஐ நிறுத்தி வைக்க டிரம்ப் உத்தரவு

"Green Card" அல்லது அமெரிக்க விசா பெறுவதற்கான லாட்டரி செயல்முறை உடனடியாக நிறுத்தி வைக்கப்படும் என்று உள்நாட்டுப் பாதுகாப்புச் செயலாளர் Khristi Noem அறிவித்துள்ளார். ஜனாதிபதி டொனால்ட்...

மெல்பேர்ண் கடற்கரையில் இளைஞர்களிடையே மோதல்

மெல்பேர்ணின் மேற்கு மற்றும் தெற்கு கடற்கரைப் பகுதிகளில் இளைஞர்களுக்கு இடையேயான மோதல்கள் இரண்டாவது நாளாகத் தொடர்கின்றன. காவல்துறையினர் கத்திகள் போன்ற ஆயுதங்களைக் கண்டுபிடித்து கைது செய்வதாகக்...