Sports10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அபார வெற்றி - IPL 2024

10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அபார வெற்றி – IPL 2024

-

ஐ.பி.எல். தொடரில் நேற்று நடைபெற்ற போட்டியில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் – லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் நாணயசுழற்சியில் வென்ற லக்னோ அணியின் தலைவர் கே.எல். ராகுல் துடுப்பெடுத்தாட தீர்மானித்தார்.

அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய லக்னோ 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 165 ஓட்டங்களை எடுத்தது. லக்னோ தரப்பில் அதிகபட்சமாக பதோனி 55 ஓட்டங்களை எடுத்தார். ஐதராபாத் தரப்பில் புவனேஷ்வர் குமார் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதையடுத்து 166 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஐதராபாத் அணி விளையாடியது. தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் – அபிஷேக் சர்மா களமிறங்கினர். இருவரும் லக்னோ பந்து வீச்சை எந்த வித சிரமமின்றி எதிர்கொண்டு அதிரடியில் வெளுத்து வாங்கினர்.

அதிரடியாக டிராவிஸ் ஹெட் 16 பந்துகளில் அரைசதம் அடித்தார். சிறிது நேரத்திலேயே அபிஷேக் சர்மா 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். இருவரின் விக்கெட்டையும் வீழ்த்த லக்னோ அணி எடுத்த எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

முடிவில் வெறும் 9.4 ஓவர்களிலேயே 167 ஓட்டங்களை அடித்து ஐதராபாத் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஐதராபாத் தரப்பில் அதிகபட்சமாக டிராவிஸ் ஹெட் 89 ஓட்டங்களும், அபிஷேக் சர்மா 75 ஓட்டங்களும் எடுத்தனர்.

Latest news

Video Game விளையாடியதற்காக விக்டோரிய நபருக்கு சிறைத்தண்டனை

விக்டோரியாவில் Video Game ஒன்றை உருவாக்கி விற்பனை செய்த குற்றச்சாட்டில் ஒருவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 32 வயதான அந்த நபர், குழந்தை பாலியல் துஷ்பிரயோகத்தை உருவகப்படுத்தும் ஆன்லைன்...

ஆஸ்திரேலியாவில் மேலும் உயரும் வீட்டு விலைகள்

நேற்று வெளியிடப்பட்ட ஒரு புதிய ஆராய்ச்சி அறிக்கை, கடந்த 5 ஆண்டுகளில் ஆஸ்திரேலியாவில் ஒரு வீட்டின் சராசரி விலை சுமார் $230,000 அதிகரித்துள்ளது என்பதைக் காட்டுகிறது. கோர்லாஜிக்கின்...

கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக குழந்தை பெற்ற பெண்

கருப்பை மாற்று அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமான குழந்தை பிறப்பு ஐக்கிய இராச்சியத்திலிருந்து பதிவாகியுள்ளது. இங்கிலாந்தில் இதுபோன்ற ஒரு அதிசயம் நிகழ்ந்தது இதுவே முதல் முறை என்று...

சீனா மீது விதிக்கப்பட்ட வரிகளால் ஆஸ்திரேலியாவும் கடுமையாகப் பாதிப்பு

ஆஸ்திரேலிய பங்குச் சந்தை இன்று காலை வர்த்தகத்தின் தொடக்கத்தில் கடும் சரிவைச் சந்தித்தது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரி விதிப்புகளால் ஆஸ்திரேலிய பங்குச் சந்தை மேலும்...

Nightclub-இன் கூரை இடிந்து விழுந்ததில் 79 பேர் உயிரிழப்பு

ஒரு பெரிய இசை நிகழ்ச்சியின் போது பிரபலமான இரவு விடுதியின் கூரை இடிந்து விழுந்ததில் 79 பேர் உயிரிழந்தனர். அரசியல்வாதிகள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உட்பட பிரபலங்கள்...

16 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்காக Facebook , Messenger தொடங்கும் புதிய கணக்குகள்

இன்று தொடங்கும் புதிய மாற்றத்தால் ஆயிரக்கணக்கான இளம் ஆஸ்திரேலியர்களின் Facebook மற்றும் Messenger கணக்குகள் பாதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஆஸ்திரேலியாவில் 16 வயதுக்குட்பட்ட பயனர்களின் சமூக ஊடகக் கணக்குகள்...