Newsஇளவரசர் ஹரியை கைவிட்ட தந்தை - உதவிக்கு ஓடோடி வந்த இளவரசி...

இளவரசர் ஹரியை கைவிட்ட தந்தை – உதவிக்கு ஓடோடி வந்த இளவரசி டயானாவின் உறவினர்கள்

-

பிரித்தானியா வந்த இளவரசர் ஹரியை அவரது தந்தையான மன்னர் சார்லஸ் புறக்கணித்த நிலையில், ஹரிக்கு ஆதரவாக நிற்க, இளவரசி டயானாவின் சகோதரரும் சகோதரியும் ஓடோடிவந்த சம்பவம் நேற்று நிகழ்ந்தது.

பிரித்தானிய இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் ராஜ குடும்பத்தைப் பிரிந்து அமெரிக்கா சென்ற நிலையில், அவர்கள் இருவரும் ராஜ குடும்பத்தை தொடர்ந்து அவமதித்துவந்தார்கள். அதைத் தொடர்ந்து, ஹரிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் இடையில் ஏற்பட்ட விரிசல் அதிகமாகிக்கொண்டே செல்கிறது.

மன்னர் சார்லசுக்கும், இளவரசி கேட்டுக்கும் புற்றுநோய் கண்டுபிடிக்கப்பட்ட பின்னராவது குடும்பம் ஒன்றிணையும் என பலரும் எதிர்பார்த்த நிலையில், அப்படி எதுவும் நடக்கவில்லை.

இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக பிரித்தானியா வந்துள்ளார் இளவரசர் ஹரி. அவர் தன் தந்தையான மன்னர் சார்லசை சந்திப்பார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் பிசியாக இருப்பதால் ஹரியை சந்திக்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டதால் பெரும் ஏமாற்றம் ஏற்பட்டது.

ஆனால், ஹரியை அவரது தந்தையான மன்னர் சார்லஸ் கைவிட்ட நிலையில், அவர் இல்லையென்றால் என்ன, நாங்கள் இருக்கிறோம் என உதவிக்கு ஓடோடிவந்துள்ளது ஹரியின் தாயான இளவரசி டயானாவின் குடும்பம்.

Latest news

பணயக் கைதிகளை விடுவிக்க மறுக்கும் நெதன்யாகு

இஸ்ரேல் – ஹமாஸ்  இடையிலான போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி பல்வேறு கட்டங்களாக ஹமாஸ் - இஸ்ரேல் இடையே பணயக் கைதிகள் பரிமாற்றம் நடந்து வருகிறது. இந்நிலையில் கடந்த 22ம்...

தென்கிழக்கு ஆசியாவிற்கு பயணம் செய்யும் விக்டோரியர்களுக்கு சிறப்பு அறிவிப்பு

தென்கிழக்கு ஆசிய பிராந்தியத்தில் சட்டவிரோத மதுபான விற்பனை காரணமாக ஆஸ்திரேலிய சுற்றுலாப் பயணிகள் பெரும் ஆபத்தில் இருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளனர். அதன்படி, லாவோஸில் உட்கொள்ளப்படும் மதுபானங்களில் சுமார்...

விக்டோரியா காவல்துறையின் பிரச்சினைகள் குறித்து வெளியான தகவல்

விக்டோரியா காவல் துறைக்குள் உள்ள பிரச்சினைகள் குறித்து அரசியல் அரங்கில் நிறைய விவாதங்கள் நடந்துள்ளன. இது தொடர்பாக மாகாண நிழல் காவல் துறை அமைச்சர் டேவிட் சவுத்விக்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

பிரான்ஸில் கத்திக்குத்து – ஒருவர் பலி

பிரான்ஸ் நாட்டின் மல்ஹவுஸ் நகரில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பிரான்ஸின் மல்ஹவுஸ் நகரிலுள்ள சந்தைப் பகுதியில் நேற்று நடந்த கத்திக்குத்து தாக்குதலில் போர்த்துக்கல்...

மிகவும் மோசமாகிவரும் போப்பின் உடல்நிலை

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புனித திருத்தந்தை பிரான்சிஸின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாக மருத்துவ அறிக்கைகள் தெரிவிக்கின்றன. 88 வயதான போப் பிரான்சிஸுக்கு சுவாசிக்க உதவும்...