Newsஇந்தியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழப்பு

இந்தியாவில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் உயிரிழப்பு

-

இந்தியாவில் குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள பொழுதுபோக்கு பூங்காவில் ஏற்பட்ட தீ விபத்தில் 27 பேர் பலியாகினர்.

உயிரிழந்தவர்களில் 12 குழந்தைகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

27 உடல்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் சில உடல்கள் இன்னும் மீட்கப்பட்டு வருவதாகவும் ராஜ்கோட் போலீஸ் கமிஷனர் ராஜு பார்கவா தெரிவித்தார்.

இடிபாடுகளில் இன்னும் பலர் சிக்கியிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளதுடன், மோசமாக எரிந்த உடல்களை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று மதியம் விளையாட்டு மையத்தில் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நிரம்பியிருந்த போது தீ விபத்து ஏற்பட்டது.

தீவிபத்துக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை, இந்த சம்பவம் குறித்து விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு நியமிக்கப்பட்டுள்ளதாக குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் தெரிவித்துள்ளார்.

ராஜ்கோட்டில் ஏற்பட்ட தீ விபத்தால் மிகவும் வருத்தமடைந்ததாகவும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவிப்பதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...