Sports3 ஆவது முறையாக ஐ.பி.எல் கிண்ணத்தை சுவீகரித்தது கொல்கத்தா - IPL...

3 ஆவது முறையாக ஐ.பி.எல் கிண்ணத்தை சுவீகரித்தது கொல்கத்தா – IPL 2024

-

17-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன் ரைசர்ஸ் ஐதராபாத் மோதின.

இறுதிப்போட்டிக்கான நாணயசுழற்சியில் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் துடுப்பெடுத்தாட களமிறங்கியது.

அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா களமிறங்கினர். முதல் ஓவரில் ஸ்டார்க் பந்து வீச்சில் 2 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் அபிஷேக் சர்மா போல்ட் முறையில் ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரை வைபவ் அரோரா வீசிய நிலையில் மற்றொரு தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் அவர் சந்தித்த முதல் பந்திலேயே ஓட்டம் எதுவும் எடுக்காமல்(0 ஓட்டங்கள்) கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த ராகுல் திரிபாதி 13 பந்தில் 9 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்து வீச்சில் ஆட்டமிழக்க மற்றொரு வீரரான நிதிஷ் ராணா 13 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். சற்று நிலைத்து நின்று ஆடிய மார்க்ரம் 23 பந்துகளில் 20 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க ஷபாஸ் அகமது 8 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த ராகுல் திரிபாதி 13 பந்தில் 9 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஸ்டார்க் பந்து வீச்சில் ஆட்டமிழக்க மற்றொரு வீரரான நிதிஷ் ராணா 13 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா வீரர்களின் அபார பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் தடுமாறியது. சற்று நிலைத்து நின்று ஆடிய மார்க்ரம் 23 பந்துகளில் 20 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க. அடுத்துவந்த ஷபாஸ் அகமது 8 ஓட்டங்களிலும், அப்துல் சமத் 12 ஓட்டங்களிலும், கிளாசன் 16 ஓட்டங்களிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர்.

இறுதியில், ஐதராபாத் 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ஓட்டங்கள் மட்டுமே எடுத்தது.

சிறப்பாக பந்து வீசிய கொல்கத்தா வீரர்கள் ரசல் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், ராணா தலா 2 விக்கெட்டுகளையும், வைபவ், நரைன், வருண் சக்ரவர்த்தி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்

இதன் மூலம் 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய கொல்கத்தா அணி 10.3 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் 17 ஆவது ஐ.பி.எல் கிண்ணத்தை தனதாக்கியது.

நன்றி தமிழன்

Latest news

Coles கடைகளில் இன்று முதல் கத்தி விற்பனைக்கு தடை

ஆஸ்திரேலியாவின் பிரபல பல்பொருள் அங்காடியான Coles-இல் இனி கத்தி விற்பனையை நிறுத்தியுள்ளது. 13 வயது சிறுவன் ஊழியர் ஒருவரை குத்தியதை அடுத்து நாடு முழுவதும் உள்ள Coles...

சர்வதேச தலையீடு இல்லாமல் சுதந்திரமாக மாற ஆஸ்திரேலியாவிடமிருந்து ஒரு புதிய திட்டம்

சர்வதேச தலையீடுகளில் இருந்து சுதந்திரமாக இருக்க ஆஸ்திரேலிய அரசு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. வெளிநாட்டு தாக்கங்கள் காரணமாக அவுஸ்திரேலியாவின் ஜனநாயகம், இறையாண்மை மற்றும் தேசிய நலன்கள் அச்சுறுத்தலுக்கு...

தென்கொரிய அதிபர் கைது

தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பரில் நாட்டில் இராணுவச் சட்டத்தை விதித்து கிளர்ச்சியை ஏற்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்...

ஆஸ்திரேலியர்கள் அதிகம் நீக்கும் சமூக ஊடகம் பற்றி வெளியான அறிக்கை

ஆஸ்திரேலியர்கள் தங்கள் தொலைபேசிகளில் இருந்து நீக்க வேண்டிய சமூக ஊடக பயன்பாடுகள் தொடர்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, எத்தனை ஸ்மார்ட்போன் உரிமையாளர்கள் தங்கள் தொலைபேசிகளில் இருந்து...

தென்கொரிய அதிபர் கைது

தென் கொரிய அதிபர் யூன் சுக் யோல் கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த டிசம்பரில் நாட்டில் இராணுவச் சட்டத்தை விதித்து கிளர்ச்சியை ஏற்படுத்த முயன்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்...

ஆஸ்திரேலியர்கள் அதிகம் நீக்கும் சமூக ஊடகம் பற்றி வெளியான அறிக்கை

ஆஸ்திரேலியர்கள் தங்கள் தொலைபேசிகளில் இருந்து நீக்க வேண்டிய சமூக ஊடக பயன்பாடுகள் தொடர்பில் அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, எத்தனை ஸ்மார்ட்போன் உரிமையாளர்கள் தங்கள் தொலைபேசிகளில் இருந்து...