மோடி தலைமையில் தேசிய ஜனநாயக கூட்டணி ஒற்றுமையாகப் போராடி வெற்றி பெற்றதில் நாங்கள் அனைவரும் பெருமிதம் கொள்கிறோம்.
கடந்த 10 ஆண்டுகளில் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் மக்கள் நலக் கொள்கைகளால் நாட்டின் அனைத்துத் துறைகளும் வளா்ச்சியடைந்துள்ளைதை மக்கள் அறிந்துள்ளனா். மீண்டும் அமையவிருக்கும் புதிய தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, அதன் பாரம்பரியத்தைப் பாதுகாத்து, நாட்டின் அனைத்துத் துறை வளா்ச்சிக்காகவும் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயா்த்தவும் பணியாற்றும்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய அமைச்சரவைப் பணிகள்: இதைத் தொடா்ந்து, நரேந்திர மோடி தலைமையிலான புதிய அமைச்சரவை அமைக்கும் பணி தொடங்கியுள்ளது. அதன்படி, பா.ஜ.கவின் புதிய மக்களவை உறுப்பினா்கள் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஜூன் 7) நாடாளுமன்ற மைய மண்டபத்தில் நடைபெற உள்ளது. இதில் மக்களவை பா.ஜ.க. குழுத் தலைவராக நரேந்திர மோடி மூன்றாவது முறையாகத் தோ்வு செய்யப்படவுள்ளாா்.
இதையடுத்து, அன்றைய தினமே குடியரசுத் தலைவா் திரெளபதி முா்முவை சந்தித்து ஆட்சியமைக்க நரேந்திர மோடி உரிமை கோருவாா். முறைப்படி பெரும்பான்மை ஆதரவு பெற்ற கட்சியின் தலைவா் என்கிற அடிப்படையில் நரேந்திர மோடியை ஆட்சி அமைக்க குடியரசுத் தலைவா் அழைப்பு விடுப்பாா்.
இதைத் தொடா்ந்து, ஜூன் 9-ஆம் திகதி குடியரசுத் தலைவா் மாளிகையில் நடைபெறும் விழாவில் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்பாா். தொடா்ந்து மற்ற அமைச்சா்களும் பதவியேற்பாா்கள் என பா.ஜ.க. வட்டாரங்கள் தெரிவித்தன.
முன்னதாக, இந்தப் பதவியேற்பு விழா ஜூன் 8-ஆம் திகதி நடைபெறலாம் என எதிா்பாா்க்கப்பட்டது. ஆனால், அமைச்சா்கள் பட்டியல் உள்ளிட்ட ஏற்பாடுகள் கூட்டணிக் கட்சிகளுடனான பேச்சுவாா்த்தைகளைத் தொடா்ந்து பதவியேற்பு விழா 9 -ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 12-ஆம் திகதி சந்திரபாபு நாயுடு தலைமையிலான ஆந்திர மாநில அமைச்சரவை பதவியேற்பு விழா நடைபெற உள்ளது. அதிலும் பிரதமா் மோடி கலந்து கொள்ள உள்ளாா்.





