Newsபெண்ணை விழுங்கிய 16 அடி மலைப்பாம்பு

பெண்ணை விழுங்கிய 16 அடி மலைப்பாம்பு

-

இந்தோனேசியாவில் காணாமல் போன பெண் மலைப்பாம்பின் வயிற்றுக்குள் இருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவின் தென் சுலானீஸ் மாகாணத்தில் உள்ள காலேம்பாங் கிராமத்தில் 45 வயதான பரிதா என்ற பெண் கணவர் மற்றும் 4 குழந்தைகளுடன் வசித்து வந்தார்.

கடந்த 3 நாட்களுக்கு முன் பரிதா திடீரென காணாமல் போன நிலையில் அவரை கணவரும் கிராமத்தினரும் தீவிரமாகத் தேடி வந்தனர். நேற்று பரிதாவின் உடைகளைக் கிராமத்தின் அருகே அவரது கணவர் கண்டுபிடித்த நிலையில் தேடுதலைத் தீவிரப்படுத்திய கிராமத்தினர் 5 மீட்டர் நீளமுடைய 16 அடி பைத்தான் வகை மலைப்பாம்பை அப்பகுதியில் பார்த்துள்ளனர்.

சந்தேகமடைந்த அவர்கள் மலைப்பாம்பின் வயிற்றைக் கிழித்து பார்த்தபொழுது உள்ளே பரிதாவின் ஆடைகளுடன் உடல் முழுதாக ஜீரணிக்கப்படாமல் இருந்துள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மிகவும் அரிதானது என்றாலும் சமீப காலங்களாக இந்தோனேசியாவில் இதுபோன்று மக்கள் மலைப்பாம்புகளால் முழுதாக விழுங்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது.

கடந்த வருடம் தினாகியா மாவட்டத்தில் விவசாயி ஒருவர் 8அடி பைத்தானால் விழுங்கப்பட்டார். 2018 இல் சுலானீஸ் மாகாணத்தில் 54 வயது பெண் ஒருவர் 7 ஆடி பைத்தானின் வயிற்றில் இருந்து சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

Latest news

61 மில்லியன் ஆஸ்திரேலியர்களுக்கு மலிவான எரிவாயு நிவாரணம்

ஆஸ்திரேலியாவின் எரிவாயு விலைகள் 2021 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்த வாரம் மிகக் குறைந்த அளவில் உள்ளன. AAA தரவுகளின்படி, நேற்று ஒரு கேலன் எரிவாயுவின் சராசரி...

டிரம்பின் காசா போர் நிறுத்தத்திற்கு ஹமாஸின் பதில்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் காசா போர் நிறுத்த முன்மொழிவுக்கு ஹமாஸிடமிருந்து நேர்மறையான பதில்கள் கிடைத்துள்ளன. பணயக்கைதிகளை விடுவிப்பது குறித்தும், மோதலை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் குறித்தும்...

விமானத்தில் பாதுகாப்பான இருக்கை எது?

விமானத்தில் மிகவும் பாதுகாப்பான இருக்கை என்பது நிபுணர்களிடையே அதிக விவாதத்திற்கு உட்பட்டுள்ளது. புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானத்தில் பயணித்த ஒருவர் அதிசயமாக உயிர்...

ஆஸ்திரேலியாவில் ஓய்வூதிய வயதை அதிகரிப்பது தொடர்பில் சிக்கல்கள்

ஓய்வு பெறும் வயது வரை வேலை செய்ய முடியாத ஊழியர்களுக்கு மாற்று நடவடிக்கைகள் இருப்பதாக நிபுணர்கள் கூறுகின்றனர். 2023 முதல், ஆஸ்திரேலியாவில் ஓய்வூதிய வயது 65 வயதிலிருந்து...