இந்தியாவின் ஜம்முவில் பேருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில் புனித யாத்திரை சென்ற 10 இந்து யாத்ரீகர்கள் கொல்லப்பட்டனர்.
இந்து பக்தர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேருந்து மீது தீவிரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 10 பேர் உயிரிழந்ததாகவும், 33 பேர் காயமடைந்ததாகவும் இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரியாசி மாவட்டத்தில் இந்த தாக்குதலால், பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து அருகில் உள்ள ஆற்றில் விழுந்ததாக கூறப்படுகிறது.
மீட்புப் பணிகள் நிறைவடைந்துள்ளதுடன், தாக்குதல் நடத்தியவர்களைக் கண்டுபிடிக்க இந்திய இராணுவமும் பொலிஸாரும் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி வருத்தம் தெரிவித்துள்ளதோடு, காயமடைந்தவர்களுக்கு அதிகபட்ச மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.
இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்தக் கட்சியும் பொறுப்பேற்காத நிலையில், மாவட்ட காவல்துறைத் தலைவர் மோஹிதா ஷர்மா ராய்ட்டர்ஸிடம் தீவிரவாதிகள் குழு ஒன்று பேருந்து மீது பதுங்கியிருந்ததாகக் கூறினார்.
தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்தியாவின் பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்ற போதே இந்த தாக்குதல் குறித்த செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது..