Newsஆஸ்திரேலியாவில் காணாமல் போயுள்ள 56,000க்கும் அதிகமானோர்

ஆஸ்திரேலியாவில் காணாமல் போயுள்ள 56,000க்கும் அதிகமானோர்

-

கடந்த 2023ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் மட்டும் 56,000க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த ஆண்டு குயின்ஸ்லாந்தில் மட்டும் 9,000க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த காணாமல் போனவர்களின் பின்னணியில் மனநலம், அதிர்ச்சி அல்லது தற்கொலை ஆகியவையும் இருப்பதாக காணாமல் போனோர் ஆராய்ச்சியாளர் பேராசிரியர் சாரா வெய்லண்ட் கூறுகிறார்.

கடந்த சில வருடங்களாக, இனந்தெரியாத மனித எச்சங்களைப் பயன்படுத்தி காணாமல் போன 19 பேர் தொடர்பில் புதிய தடயவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மத்திய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பரிசோதிக்கப்பட்ட சில எலும்புகள் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானவை என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அவுஸ்திரேலியாவில் வருடாந்தம் 55,000க்கும் அதிகமானோர் காணாமல் போவதாக பொலிஸ் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் காணாமல் போனவர்கள் விரைவாக கண்டுபிடிக்கப்பட்டாலும், அது எப்போதும் வெற்றியடைவதில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.

அவுஸ்திரேலிய மாநகரப் பகுதியில் நீண்டகாலமாக காணாமல் போனவர்கள் 14 பேர் உள்ளதாகவும், இதில் வெளிநாட்டில் காணாமல் போன இருவர் உள்ளடங்குவதாகவும் கூறப்படுகிறது.

காணாமல் போனவர்களைக் கண்டுபிடித்து, பொதுமக்களின் உதவியுடன் அவர்களது அன்புக்குரியவர்களுடன் மீண்டும் இணைத்துவிடுவோம் என நம்புவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Latest news

பயணிகளிடையே குறைந்துவரும் Myki அட்டை பயன்பாடு

மெல்பேர்ணில் பேருந்தில் பயணிக்கும் சுற்றுலாப் பயணிகள் Myki அட்டையைப் பயன்படுத்தும் போக்கு மிகக் குறைவாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில நாடாளுமன்றத்தால் வெளியிடப்பட்ட ஒரு ஆவணம், நான்கில் ஒருவர்...

முக அங்கீகார தொழில்நுட்பத்தை அகற்றும் Kmart

கடைக்குள் நுழையும் வாடிக்கையாளர்களுக்கான முக அங்கீகார தொழில்நுட்பத்தை (FRT) அகற்ற Kmart முடிவு செய்துள்ளது. 2020 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட வாடிக்கையாளர்களின் அனுமதியின்றி முக அங்கீகார தொழில்நுட்பத்தை...

Meta தயாரித்த விசித்திரமான கண்ணாடிகள்

Meta தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், செயற்கை நுண்ணறிவால் இயங்கும் புதிய ஸ்மார்ட் கண்ணாடிகளை வெளியிட்டார். கண்ணாடிகள் நிறுவனமான Ray-Ban-உடன் இணைந்து உருவாக்கப்பட்ட இந்தக் கண்ணாடிகள்,...

ஆபத்தான விளையாட்டாக கால்பந்து – புதிய ஆய்வு

கால்பந்து விளையாடுவது மூளை ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் நீண்டகாலம் ஈடுபடுவது தலையில் காயத்தை ஏற்படுத்தும் என்றும்,...

ஆபத்தான விளையாட்டாக கால்பந்து – புதிய ஆய்வு

கால்பந்து விளையாடுவது மூளை ஆரோக்கியத்திற்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடும் என்று ஒரு புதிய ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. குத்துச்சண்டை போன்ற விளையாட்டுகளில் நீண்டகாலம் ஈடுபடுவது தலையில் காயத்தை ஏற்படுத்தும் என்றும்,...

ஆப்கானிஸ்தானில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தடை

ஆப்கானிஸ்தானில் பல்கலைக்கழகங்களில் பெண்கள் எழுதிய புத்தகங்களுக்கு தலிபான் அரசு தடை விதித்துள்ளது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்க படைகள் வெளியேறியதைத் தொடர்ந்து தலிபான்கள்...