ஆஸ்திரேலியாவில் முதலைகள் அதிகம் உள்ள மாநிலம் வடக்கு பிரதேசம் என்று புதிய ஆய்வுகள் கண்டறிந்துள்ளன.
குறித்த மாநிலத்தில் உள்ள நீர்த்தேக்கங்களைச் சுற்றி குறைந்தது ஒரு லட்சம் முதலைகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது, மேலும் கடந்த ஆண்டு முதலை தாக்குதலால் இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.
டார்வின் தென்மேற்கு பகுதியில் உள்ள நீர்த்தேக்கத்தில் செவ்வாய்க்கிழமை குடும்பத்துடன் நீராடச் சென்ற 12 வயது சிறுமி முதலை தாக்கி உயிரிழந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
சிறுமி காணாமல் போன பகுதியில் முதலைகள் நடமாடுவதாகவும், சிறுமி காணாமல் போனதை அடுத்து, 40 பேர் கொண்ட குழுவினர் சிறுமியை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
சிறுமியை தேடும் பணியில் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டாலும், இதுவரை ஒரு சில எலும்புகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
இதன் காரணமாக சதுப்பு நிலங்களில் சுற்றித் திரியும் போது கவனமாகவும் அவதானமாகவும் இருக்குமாறு பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.





