சிட்னியில் உள்ள பிரபலமான கடற்கரையான லிட்டில் பேயில் அடையாளம் தெரியாத இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
இன்று முற்பகல் 11.10 மணியளவில் கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் வந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, அருகில் உரிமையாளர்கள் இல்லாத பல பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உயிரிழந்த இருவர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என்று கூறப்படுகிறது.
ஒருவரின் சடலம் காலையிலும் மற்றைய சடலம் பிற்பகல் 1.40 மணிக்கும் கண்டெடுக்கப்பட்டது.
இந்த மரணங்கள் இடம்பெற்ற விதம் தொடர்பில் சந்தேகம் நிலவுவதாகவும் மரணத்திற்கான காரணம் இதுவரையில் வெளியாகவில்லை எனவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.
அப்பகுதியில் இன்னும் பொலிஸ் நடவடிக்கை இடம்பெற்று வருவதாகவும், சம்பவம் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் குற்றப் பிரிவுக்கு அறிவிக்குமாறும் கோரப்பட்டுள்ளது.





