இந்திய பொப் ஐகான் உஷா உதுப்பின் கணவர் ஜோனி சாக்கோ உதுப் (78) நேற்று மாரடைப்பால் உயிரிழந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உஷா உதுப்பின் கணவருக்கு திடீரென உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால் அவரை அருகிலுள்ள வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர். அவரை பரிசோதித்த வைத்தியர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர்.
மேலும், இவர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.
அவரின் இறுதிச்சடங்கு இன்று கொல்கத்தாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறுமென்று அவர்களது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
உஷா உதுப்பின் கணவர் உயிரிழந்ததையடுத்து அவருக்கு திரையுலகினர் ஆறுதலையும் இரங்கலையும் தெரிவித்து வருகின்றனர்.