2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக இருந்து விலகவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் தெரிவித்துள்ளார்.
தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக வேறு யாரையாவது போட்டியிட வைப்பதற்காக தேர்தல் பிரசாரத்தில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.
மேலும், அமெரிக்க அதிபராக பணியாற்றுவது வாழ்வில் கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்றும் அவர் தனது அறிவிப்பில் குறிப்பிட்டுள்ளார்.
தனது பதவிக்காலத்தில் ஜனாதிபதியாக செய்ய வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவதில் மட்டும் கவனம் செலுத்துவதே கட்சிக்கும் நாட்டின் நலனுக்கும் நல்லது என்று தான் நம்புவதாக ஜோ பிடன் கூறினார்.
இது தொடர்பில் மக்களை மேலும் தெளிவுபடுத்துவதற்காக இந்த வார இறுதியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவதற்கு தயார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிபர் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்த அதிபர் ஜோ பிடன், ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக துணை அதிபர் கமலா ஹாரிஸை முன்னிறுத்தப் போவதாக அறிவித்துள்ளார்.