Newsஎஜமானை துப்பாக்கியால் சுட்ட ரோபோ நாய்!

எஜமானை துப்பாக்கியால் சுட்ட ரோபோ நாய்!

-

ரோபோ நாய் ஒன்று சோதனை முயற்சியில் பிரபல யூடியூபர் டாரன் ஜாசனை நெருப்புத் துப்பாக்கியால் சுட்ட காட்சி இணையத்தளத்தில் வைரலாகி உள்ளது.

‘ஸ்பீடு’ என்று அறியப்படும் டாரன் ஜாசன், சமீபத்தில் ஒரு ரோபோ நாய்க்குட்டியை வாங்கி அதை நேரடியாக இணையத்தள காணொளியில் பரிசோதித்துப் பார்த்தார்.

முதலில் அவர் ரோபோ நாய்க்கு கை கொடுக்கும் போது நாயும் முன்னங்காலைத் தூக்கிக் கை கொடுத்தது. பின்னர் அவர் பின்னோக்கி பல்டி அடித்தபோது, நாயும் துள்ளிக் குதித்தது.

பிறகு ரோபோ நாயில் இணைக்கப்பட்டுள்ள துப்பாக்கி பொத்தானை அழுத்தி விட்டு, குரைக்கும்படி கட்டளையிட்டார். ஆனால் ரோபோ நாய் எதிர்பாராதவிதமாக, துப்பாக்கியை இயக்கி எஜமானரை எதிரியாக நினைத்துச் சுடத் தொடங்கியது.

துப்பாக்கியிலிருந்து நெருப்பு பிழம்பு வெளியேறி டாரன் ஜாசனை தாக்கியது. இதை எதிர்பாராத அவர் அருகிலிருந்த நீச்சல் குளத்தில் குதித்தார்.

அப்போதும் ரோபோ நாய் அவரை நோக்கித் தொடர்ந்தும் சுட்டதில் ஒருவழியாக அதன் பார்வையிலிருந்து தப்பி, பின்புறமாக வந்து அதன் துப்பாக்கி பொத்தானை நிறுத்தியபிறகுதான் ரோபோ நாய் சுடுவதை நிறுத்தியது.

இச்சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக அவர் காயம் அடையாமல் தப்பினார்.

Latest news

ஆஸ்திரேலிய சந்தைக்கு வரும் ஒரு புதிய மின்சார கார்

இந்த ஆண்டு ஆஸ்திரேலிய சந்தையில் ஒரு புதிய மின்சார கார் வர உள்ளதாக கூறப்படுகிறது. பொதுமக்களால் மலிவு விலையில் வாங்கக்கூடிய Hatchback ரக கார்கள் சந்தைக்கு வர...

நீண்ட வார இறுதியில் விக்டோரியாவுக்குச் செல்வோருக்கான சிறப்பு அறிவிப்பு

வரவிருக்கும் நீண்ட வார இறுதியில் பயணம் செய்யத் திட்டமிடும் விக்டோரியர்களுக்கு அதிகாரிகள் சிறப்பு பாதுகாப்பு ஆலோசனைகளை வெளியிட்டுள்ளனர். மாநிலத்தின் பல பகுதிகளில் காட்டுத்தீ இன்னும் தீவிரமாக உள்ளது. காட்டுத்தீ...

மீண்டும் இயக்கப்படும் உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம்

ஜப்பானில் உள்ள உலகின் மிகப் பெரிய அணுமின் நிலையம் மீண்டும் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் நாட்டில் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கம் மற்றும் சுனாமியில்...

ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாட வருபவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

வரும் 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு, சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை பலத்த பாதுகாப்பு வளையத்துடன் மூட...

ஆஸ்திரேலிய தினத்தைக் கொண்டாட வருபவர்களுக்கான சிறப்பு அறிவிப்பு

வரும் 26 ஆம் திகதி வரும் ஆஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு, சிட்னி ஓபரா ஹவுஸ் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியை பலத்த பாதுகாப்பு வளையத்துடன் மூட...

12 ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்த சிட்னி Lockout சட்டங்கள்

சிட்னியின் இரவு நேர பொருளாதாரத்தை கடுமையாக பாதித்த Lockout சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்ட 12வது ஆண்டு நிறைவையொட்டி, Minns தொழிற்கட்சி அரசாங்கம் அந்தச் சட்டங்கள் முற்றிலுமாக ரத்து...