அவுஸ்திரேலியாவில் பெண் ஒருவர் தன்னுடைய அண்டை வீட்டுக்காரருக்கு உயிரை பறிக்கக் கூடிய கோவிட் 19 தொற்றை பரப்பியதாக குற்றம் சுமத்தப்பட்டு அவருக்கு சிறைத் தண்டனையை தவிர்த்து 3 மாத இடைநிறுத்தப்பட்ட தண்டனை மற்றும் $886.75 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
54 வயதான பெண் மிகுந்த உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டு இருந்தும் டிசம்பர் 21, 2021ம் ஆண்டு படிக்கட்டில் நேருக்கு நேர் சந்தித்ததாக புற்றுநோயாளியான உயிரிழந்தவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட பெண் மற்றும் ஆண் ஆகிய இருவரின் வைரஸ் DNA (viral DNA) கிட்டத்தட்ட 100 சதவீதம் ஒத்துப் போயிருப்பதாகவும், நிபுணர்களின் சாட்சியங்கள் படி, அதை பிரதிவாதி(கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட பெண்) தான் அதை பெறுநருக்கு அனுப்பி இருக்க வேண்டும் என்பது உறுதி என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், “ தனிப்பட்ட முறையில் உங்களுக்காக வருந்துகிறேன், அநேகமாக இதுப்போன்று பலமுறை நடந்து இருக்கும்” என்று குற்றம் சுமத்தப்பட்ட பெண்ணிடம் நீதிபதி தெரிவித்தார்.
ஆனால் துரதிஷ்டவசமாக நிபுணர்கள் உங்களிடம் இருந்து தான் தொற்று பரவியுள்ளது என்பதை உறுதிப்படுத்தியுள்ளனர் என நீதிபதி தெரிவித்துள்ளார்.
கோவிட் தொற்று தொடர்பாக சம்பந்தப்பட்ட பெண் தண்டிக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.