ஆஸ்திரேலியாவில் உயர் இரத்த அழுத்த விகிதங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தேசிய பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளது.
அவுஸ்திரேலியாவில் 6.8 மில்லியன் மக்கள் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
மேலும், அதிகளவானோர் தமக்கு இந்நிலை இருப்பதை அறியாமலேயே அன்றாட நடவடிக்கைகளில் ஈடுபடுவதுடன், சுமார் 32 வீதமானவர்கள் உயர் இரத்த அழுத்தத்தைக் கண்டறிந்து சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதார அதிகாரிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.
இந்த நிலையில் உயர் இரத்த அழுத்த நிலைமைகளை எதிர்நோக்கும் மக்களுக்கு கல்வி கற்பிப்பதற்கும், கண்டறியப்படாதவர்களை சிகிச்சைக்கு அனுப்புவதற்கும் விசேட செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 2030ம் ஆண்டுக்குள் ஆஸ்திரேலியாவில் உயர் ரத்த அழுத்தத்தை 70 சதவீதம் கட்டுப்படுத்துவதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.
உயர் இரத்த அழுத்தம் ஆஸ்திரேலியாவில் தடுக்கக்கூடிய மரணத்திற்கு முதன்மையான காரணமாக கருதப்படுகிறது, மேலும் இது மாரடைப்பு மற்றும் பக்கவாதம் போன்ற அபாயகரமான நிலைமைகளை விளைவிப்பதாக கூறப்படுகிறது.
உயர் இரத்த அழுத்தம் மற்றும் தொடர்புடைய நிலைமைகளால் ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் 25,000 இறப்புகள் ஏற்படுவதாக சமீபத்திய புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
சத்தான உணவுகளை உணவில் சேர்த்துக் கொள்வது, உடல் செயல்பாடுகளில் ஈடுபடுவது, காரம் அதிகம் உள்ள உணவுப் பொருட்களைப் பயன்படுத்துவதைக் குறைப்பது, மது, புகைப்பிடிப்பதைத் தவிர்ப்பது போன்றவற்றின் மூலம் உயர் ரத்த அழுத்தத்தைத் தவிர்க்கலாம் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.