News80 ஆண்டுகளுக்கு முன் மனிதர்களை அழைத்து செல்லவுள்ள Google

80 ஆண்டுகளுக்கு முன் மனிதர்களை அழைத்து செல்லவுள்ள Google

-

Google அதன் செயற்கைக்கோள் படத் தளமான Google Earth பற்றிய அற்புதமான புதுப்பிப்புகளுடன் பயனர்களை 1930ஆம் ஆண்டுக்கு அழைத்துச் செல்ல உள்ளது. இந்த மேம்பாடு, தனிநபர்களை 80 ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்று செயற்கைக்கோள் மற்றும் வான்வழி படங்களை பார்ப்பதற்கு உதவுகிறது.

மேலும் பல்வேறு இடங்களுக்கு இது காலவரிசையை (Timeline) கணிசமாக நீட்டிக்கும். தற்போது, ​​பயனர்கள் கடந்த சில தசாப்தங்களின் படங்களை மட்டுமே பார்க்க முடிகிறது. ஆனால் வரவிருக்கும் புதிய அம்சங்கள், 1930களில் லண்டன், பெர்லின், வார்சா மற்றும் பாரிஸ் போன்ற நகரங்கள் எப்படி இருந்தது என ஆராய அனுமதிக்கும். இது நேர வரம்பை திறம்பட இரட்டிப்பாக்குவதுடன், பயனர்களுக்கு “Time travel” மற்றும் இந்த நகர்ப்புற நிலப்பரப்புகளின் பரிணாமத்தை காண ஒரு தனித்துவமான வாய்ப்பை வழங்குகிறது.

கூகுள் அதன் அறிவிப்பில், 1938ல் உள்ள சென் பிரான்சிஸ்கோவிற்கும், 2024ல் அதன் தற்போதைய நிலைக்கும் இடையே உள்ள குறிப்பிடத்தக்க ஒப்பீடுகளைக் காட்சிப்படுத்தியது.

இது பல ஆண்டுகளாக குறிப்பிடத்தக்க புவியியல் மாற்றங்களை எடுத்துக்காட்டுகிறது. உதாரணமாக, சான் ஃபிரான்சிஸ்கோ துறைமுகங்களின் வரலாற்று படம். அன்று போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட கப்பல், தற்போது உணவகங்கள் மற்றும் உல்லாசக் கப்பல்கள் என மாறியுள்ளது.

இந்த புதிய அம்சத்தை மொபைல் மற்றும் இணையம் மூலம் பெறலாம். மேலும், வரும் வாரங்களில் இதில் மேம்படுத்தப்பட்ட அம்சம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, google தனது வீதிக் காட்சி (Street View) அம்சத்தை கிட்டத்தட்ட 80 நாடுகளில் மேம்படுத்த திட்டமிட்டுள்ளது. அத்துடன், google earth மற்றும் google மேப்பில் பயனர்கள் மேம்பட்ட படத் தரத்தை எதிர்பார்க்கலாம். ஏனெனில் மேம்பட்ட AI மாதிரிகள் மூலம் காட்சிகளை கூர்மைப்படுத்தி தெளிவுபடுத்துவதை நிறுவனம் நோக்கமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

நன்றி தமிழன்

Latest news

உலகின் சிறந்த நீதிபதி காலமானார்

"உலகின் சிறந்த நீதிபதி" என்று அழைக்கப்படும் அமெரிக்க நீதிபதி Frank Caprio காலமானார். கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த இவர் தனது 88ஆவது வயதில் இறந்தார். அமெரிக்காவின் Rhode தீவில்...

வெடிக்கும் நட்சத்திரத்தின் உட்புறத்தை முதன்முதலில் பார்த்த விஞ்ஞானிகள்

வெடிக்கும் நட்சத்திரத்தின் (supernova) உட்புறத்தைக் கவனிப்பதில் விஞ்ஞானிகள் முதல் முறையாக வெற்றி பெற்றுள்ளனர். நட்சத்திரங்கள் எரிபொருள் தீர்ந்து போகும் வரை மில்லியன் கணக்கான முதல் டிரில்லியன் ஆண்டுகள்...

ஆஸ்திரேலியாவில் மாறிவரும் Rewards மற்றும் Loyalty திட்டங்கள்

ஆஸ்திரேலியாவின் பிரபலமான Rewards மற்றும் Loyalty திட்டங்கள் மாறி வருகின்றன. ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் காரணமாக, Qantas மற்றும் Virgin போன்ற பிரபலமான விமான நிறுவனங்கள்...

விற்பனைக்கு வர உள்ள நீண்டகாலமாக இயங்கும் ஆஸ்திரேலிய பேக்கரி சங்கிலி

ஆஸ்திரேலிய உணவுத் துறையில் ஒரு முக்கிய நிறுவனம், கடந்த நிதியாண்டில் அதன் தாய் நிறுவனத்திற்கு 12 மில்லியன் டாலர்களுக்கும் அதிகமான நஷ்டத்தை ஏற்படுத்திய பின்னர் விற்பனைக்கு...

TikTok-ஐ வேண்டாம் என்று கூறிய ட்ரம்ப் செய்த காரியம்

வெள்ளை மாளிகை அதிகாரப்பூர்வமாக TikTok கணக்கைத் தொடங்கியுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகக் கருதி, TikTok-ஐ தடை செய்ய முன்பு முயன்றார். 2020 ஆம்...

NSW-வில் 83 வயது முதியவரை தற்செயலாக கத்தியால் குத்திய நபர்

நியூ சவுத் வேல்ஸின் ஹண்டர் பகுதியில் உள்ள ஒரு ஷாப்பிங் சென்டர் கார் நிறுத்துமிடத்தில் 83 வயது முதியவர் மீது "முட்டாள்தனமான" மற்றும் "தற்செயலாக" ஒருவர்...