NewsHospital in Home திட்டத்தை அறிமுகப்படுத்தும் NSW மருத்துவமனைகள்

Hospital in Home திட்டத்தை அறிமுகப்படுத்தும் NSW மருத்துவமனைகள்

-

நியூ சவுத் வேல்ஸ் மாநில அரசு எடுத்த நடவடிக்கையால், ஆயிரக்கணக்கான நோயாளிகள் வீட்டிலிருந்தே மருத்துவ சிகிச்சை பெறும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மருத்துவமனைகளில் காத்திருப்பு நேரத்தை குறைக்கும் நோக்கில், Hospital in Home (HITH) திட்டத்தின் மூலம் கூடுதலாக 3500 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 31.4 மில்லியன் டாலர்களை ஒதுக்கீடு செய்ய மாநில அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

இத்திட்டம் கடந்த வருடம் 5300 நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்கியதுடன் சிகிச்சைக்கான காத்திருப்பு நேரத்தை குறைத்து அவர்கள் வீட்டிலிருந்தே தொடர்ந்து சிகிச்சை பெறும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

நியூ சவுத் வேல்ஸ் மாநில சுகாதார அமைச்சர் ரியான் பார்க் கூறுகையில், அவசர சிகிச்சைப் பிரிவுகள் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்காக நோயாளிகளை வீட்டிலேயே கவனித்துக் கொள்வதற்கான கூடுதல் அமைப்புகள் உருவாக்கப்பட்டு வருகின்றன.

கூடுதலான நிதியானது அதிகமான மருத்துவமனை படுக்கைகளை விடுவிக்கும் மற்றும் திட்டத்திற்கு ஆதரவாக கூடுதல் பணியாளர்களை நியமிக்கவும் பயன்படுத்தப்படும்.

மருத்துவப் பணியாளர்கள் நோயாளிகளுக்கு வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளவும், அவர்களை தொலைதூரத்தில் கண்காணிக்கவும் முடியும்.

மருத்துவமனையில் தங்காமல் வீட்டிலேயே பாதுகாப்பான சிகிச்சைக்கான நிலைமைகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுப்பதாக மாநில அரசு தெரிவித்துள்ளது.

Latest news

Harvard உடன் கல்விசார் தொடர்புகள் துண்டிப்பு – Pentagon அறிவிப்பு

அமெரிக்காவின் மிகவும் பழமையான மற்றும் புகழ்பெற்ற கல்வி நிறுவனமான Harvard பல்கலைக்கழகத்துடனான அனைத்து கல்விசார் தொடர்புகளையும் துண்டிப்பதாக அமெரிக்க பாதுகாப்புத் துறையான Pentagon அறிவித்துள்ளது. Harvard பல்கலைக்கழகம்...

ஆஸ்திரேலியாவில் Boot-ஐ திறந்து வைத்துக்கொண்டு வாகனம் ஓட்டுவது சட்டவிரோதமா?

ஆஸ்திரேலியாவில் பலர் ஷாப்பிங் சென்று பெரிய பொருட்களைக் கொண்டு வரும்போது தங்கள் வாகனத்தின் பின்புறத்தை (Boot) முழுமையாக மூட முடியாத சூழ்நிலைகளை எதிர்கொள்கின்றனர். இருப்பினும், ஆஸ்திரேலியாவில் Boot-ஐ...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

மே மாத பட்ஜெட்டில் வரி மாற்றங்கள் குறித்து முடிவு

மே மாதம் சமர்ப்பிக்கப்படும் மத்திய பட்ஜெட், பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதிலும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதிலும் கவனம் செலுத்தும் என்று பொருளாளர் ஜிம் சால்மர்ஸ் கூறுகிறார். அதற்காக, பட்ஜெட்டில் உற்பத்தித்திறனை...

சட்டவிரோத மின்-பைக்குகளுக்கு எதிராக ஒரு மாநிலம் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோத மின்-பைக் பயன்பாடு மற்றும் சமூக விரோத ஓட்டுநர் நடத்தையை கட்டுப்படுத்த புதிய சட்டங்களை அறிமுகப்படுத்த நியூ சவுத் வேல்ஸ் அரசு திட்டமிட்டுள்ளது. புதிய விதிகளின் கீழ்,...

இன்று சிட்னிக்கு பலத்த பாதுகாப்பு – 3,500 காவல்துறை அதிகாரிகள்

இஸ்ரேலிய ஜனாதிபதி ஐசக் ஹெர்சாக்கின் அரசுமுறை வருகையையொட்டி திங்கள்கிழமை முதல் சிட்னி முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நோக்கத்திற்காக சுமார் 3,500 காவல்துறை அதிகாரிகள்...