அடுத்த சில நாட்களில் மெல்பேர்ண், அடிலெய்ட், பெர்த் மற்றும் பிரிஸ்பேர்ண் ஆகிய இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
அதன்படி, சிட்னி நகரை இந்த நாட்களில் பாதித்துள்ள மோசமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணிகள் தொடரும் என அனர்த்த திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இன்று வெளியாகியுள்ள சமீபத்திய வானிலை அறிவிப்பின்படி, சிட்னியின் தெற்குப் பகுதியே மோசமான வானிலையால் அதிகம் பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.
இது தவிர, கிழக்குக் கடலோரப் பகுதிகளில் அடுத்த சில நாட்களில் கனமழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதால், மக்கள் பயணத்தின் போது கட்டாயம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
மேலும், இன்று மாலை மெல்பேர்ணைச் சுற்றிலும் இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடும் என்றும், மணிக்கு 15 கிமீ முதல் 25 கிமீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.